வாய் கொழுப்பால் டாப் ஹீரோ டூ காமெடியனான முன்னணி பிரபலம்... யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபல நடிகராக இருந்தவர் தனது சின்ன தவறால் வாழ்க்கையினையே தலை கீழாக மாறிய சோகம் நிகழ்ந்துள்ளது.
பாரதிராஜா தனது கிழக்கே போகும் ரயில் படத்திற்கு நாயகனை தேடி வந்தார். அப்போது, சுதாகர் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இணைந்து இருந்தார். அப்போது இந்த படத்திற்கான ஆடிஷனில் சிரஞ்சீவி, ஹரி பிரசாத்துடன் சுதாகரும் கலந்து கொண்டார். ஆகியோரை சந்தித்தார். இந்த மூவரில் நடிகை ராதிகாவுடன் ஹீரோவாக நடிக்கும் முதல் வாய்ப்பு சுதாகருக்கு கிடைத்தது. முதல் படமே செம வரவேற்பினை பெற்றது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. சுதாகருடன் இணைந்து ராதிகா மட்டுமே 11 படங்களில் நடித்திருந்தார்.
இவரின் படங்கள் எல்லாம் அப்போது ரஜினி படங்களுக்கே டப் கொடுத்ததாம். பாரதிராஜாவின் ஆஷ்தான ஹீரோவாக வலம் வந்தார். ஆனால் சுதாகருக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் இருந்து வந்ததாம். படப்பிடிப்புக்கு குடித்து விட்டு தான் வருவாராம். அப்போது அவரிடன் பேசும் படக்குழுவினரிடன் தவறாக பேசி சண்டைக்கு நின்றது அப்போதே அவரின் சினிமா வாழ்க்கையினை அசைத்தது. வாய்ப்புகள் குறைந்தது. ஒரேடியாக தமிழில் ஓரம் கட்டப்பட்டார்.
இனி இங்கு சரி வராது என நினைத்தவர் கோலிவுட்டிற்கு டாட்டா காட்டி விட்டு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவருக்கு நாயகன் வேடம் கிடைக்கவில்லையாம். காமெடியனாக நடிக்க துவங்கினார். தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரங்களே அவருக்கு கிடைத்தது. நல்ல நிலைமையில் இருக்கும் போது, இவரிடம் ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் தலை தூக்கியதாம். சூட்டிங்கிற்கு குடித்து விட்டு, கண்டப்படி பேசுவாராம்.
இதனால் படப்பிடிப்புகள் நிற்க துவங்கியதாம். இவரை வைத்த படமியக்கணும் என்று பலரும் அலறினர். தொடர்ந்து, அவரால் ஹீரோவாக மீண்டும் தமிழில் தலை தூக்கவே முடியவில்லை. தெலுங்கில் சில படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ல் அதிசயபிறவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவரை மீண்டும் 10 வருடம் கழித்து காதல் அழிவதில்லை படத்தில் தான் பார்க்க முடிந்தது. மீண்டும் 17 வருடம் கழித்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.