என்ன இருந்தாலும் உங்க அழகுக்கு ஈடாகாது.! சுகன்யாவின் மகளை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் 90s கிட்ஸ்களுக்கு நடிகை சுகன்யாவை நன்கு தெரியும். அதுவும் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த், சுகன்யா தொப்புளில் பம்பரம் விடும் காட்சி தற்போது வரை பலருக்கு ஃபேவரட். அதன் மூலம்தான் சுகன்யாவை பெரும்பாலான 90'S களுக்கு தெரிந்திருக்கும்.
அதன்பிறகு சன் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கிய சுகன்யா, தற்போது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவ்வப்போது தனக்கு ஏற்ற சில கதாபாத்திரங்களில், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் தற்போதைய 2K கிட்ஸ்களுக்கு சுகன்யாவை தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
இதையும் படியுங்களேன் - வலிமை ரிசல்ட்டை அன்றே கணித்த அஜித்.!? என்ன சொல்லி வைச்சிருக்கார் பாருங்க…
இது ஒருபுறமிருக்க, அன்மையில் சுகன்யாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த செல்பி புகைப்படத்தில் சுகன்யா, சுகன்யாவின் குடும்பத்தார், சுகன்யாவின் மகள் ஆகியோர் இருந்தனர்.
இதனை பார்த்த 90'S கிட்ஸ்கள் சுகன்யா இன்னும் அப்படியே தான் இருக்கின்றனர். அவருடைய மகள் அவர் அளவுக்கு ஈடாக முடியாது. சுகன்யா அழகுக்கு ஈடாக முடியாது என்று கூறி வருகின்றனர். இதுவரை சுகன்யா மகள் புகைப்படம் இணையத்தில் வெளியில் தெரிந்தது இல்லை. தற்போது இந்த புகைப்படம் வெளியாகி உள்ளதால் அது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.