தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் கரகாட்டக்காரன். இயக்குனர் கங்கை அமரனில் துவங்கி நடிகர் ராமராஜன் வரைக்கும் அனைவருக்கும் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கரகாட்டக்காரன்.
அதுவும் நடிகை கனகாவிற்கு அது முதல் படம். ஒரு கதாநாயகிக்கு முதல் படமே பெரும் ஹிட் கொடுப்பது பெரிய அதிர்ஷ்டமாகும். ஆனால் கரகாட்டக்காரன் வெளியாகும் வரையிலும் பலருக்கும் அதன் மீது பெரும் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.
ஏனெனில் கரகாட்டம் என்றாலே ஆபாசமான நடனம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருந்து வந்தது. அதிலிருந்து மாற்றி அதை ஒரு கலையாக மற்றவர் மனதில் பதிய வைத்தவர் இயக்குனர் கங்கை அமரன்தான். கரக்காட்டக்காரன் திரைப்படமாவதற்கு முன்பு பல நாட்களாக அதன் கதையை எழுதி வந்தார் கங்கை அமரன்.
தானாக வந்த வாய்ப்பு:
அப்போது ஒருமுறை எதேர்ச்சையாக நடிகை சுகன்யாவை பார்த்துள்ளார் கங்கை அமரன். நடிகை சுகன்யா நடனமாடுவதற்காகதான் சினிமாவிற்கு வந்தார். எனவே மற்ற டான்ஸ் ஆடும் பெண்களோடு இவரும் இருந்தார். அவரை பார்த்ததும் யார் இந்த பெண் புதிதாக இருக்கிறாரே? என கேட்டுள்ளார் கங்கை அமரன்.
சுகன்யாவை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொண்ட கங்கை அமரன் சில நாட்கள் கழித்து நேரில் சென்று சுகன்யாவை சந்தித்துள்ளார். அவரிடம் “கரகாட்டக்காரன்னு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் அதுல கதாநாயகி, நான் முடிவு பண்ணிட்டேன்” என கூறியுள்ளார்.
ஆனால் இறுதி கட்டத்தில் அந்த வாய்ப்பு எப்படியோ கனகாவிற்கு மாறிவிட்டது. இல்லையெனில் அந்த படம் சுகன்யாவிற்கு முதல் படமாக இருந்திருக்கும்.
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…