நீங்க பாக்குற கவுண்டமணி வேற!.. நிஜத்தில் அவர் வேறலெவல்!.. சுகன்யா சொன்ன சீக்ரெட்!…
நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் கவுண்டமணி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் செந்திலை தன்னுடன் சேர்த்துக்கொண்டு காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அது ஒர்க் அவுட் ஆகவே கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து பல படங்களில் தனியாக காமெடி டிராக் செய்தனர். இவர்களுக்காகவே ரசிகர்கள் திரைப்படங்களுக்கு சென்ற காலம் கூட உருவானது.
சில படங்களில் கதாநாயகனாவும், வில்லனாகவும் கவுண்டமணி நடித்துள்ளார். நாடகங்களில் வில்லன் வேடத்தில் இவர் அசத்தலாக நடிப்பார் என நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் கூறினார். சத்தியராஜ், கார்த்தி, பிரபு, சரத்குமார் ஆகியோரின் பல படங்களில் அவர்களோடு படம் முழுவதும் வரும்படியான கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார்.
இந்நிலையில், கவுண்டமணியுடன் பல படங்களில் நடித்த நடிகை சுகன்யா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நீங்கள் திரையில் பார்க்கும் கவுண்டமணி வேறு. நிஜத்தில் சினிமாவை பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நடிகர் அவர். குறிப்பாக ஹாலிவுட் படங்களை பற்றி வியந்து பேசுவார். சில படங்களின் பெயரை சொல்லி ‘இந்த படம் பாரும்மா.. ஹீரோ சூப்பரா நடிச்சிருப்பான்’ என சொல்லுவார்’ என சுகன்யா பேசியுள்ளார்.
கவுண்டமணி தமிழ் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி. ஆனால், அதிகம் பார்க்கமாட்டார். அவர் அதிகம் பார்ப்பது ஹாலிவு படங்கள் மட்டுமே என சத்தியராஜே ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.