நடிகை சுஹாசினியை தமிழ் நாட்டைவிட்டே விரட்டனும்...! கொந்தளிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்...
அரசியலின் தாக்கம் பொதுமக்களின் வாழ்க்கையிலும் இல்லாமல் சினிமா வரைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசும் ஒரு நட்சத்திரம் கையில் மாட்டுனா போதும் அவ்ளோதான் அவனோட கதை அன்னையோட முடிஞ்சி போச்சுனே சொல்லலாம். அந்த அளவுக்கு யாரு மாட்டுவா என்ன பேசுவானு எதிர்பார்த்துட்டே இருக்குது இந்த உலகம்.
சினிமாவில் மட்டும் அப்படி என்ன என்று பார்த்தால் அரசியலில் ரசிகர்களை சம்பாதிப்பதை விட சினிமாவில் நட்சத்திரங்கள் சம்பாதிக்கும் ரசிகர்களே ஏராளம். அதனால் அரசியலின் பார்வை சினிமா உலகத்தையும் நோக்கி பாய்கிறது. அதே மாதிரி தான் அண்மையில் இசைஞானியும் மோடிக்கு ஆதரவாக ஏதோ பாடல் எழுதி பாடுனாருனு பெரிய பிரச்சினையே கிளம்புனது எல்லாருக்கும் தெரியும்.
அவருக்கு ஆதரவாக அவரது தம்பியும் பிஜேபியில் ஒரு அங்கமாக இருக்கும் கங்கை அமரன் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாகவே மாறியது. இதே போல தான் நடிகை சுஹாசினியும் சிக்கியுள்ளார். ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது அங்கு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது ஹிந்தி நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என ஒரு நிரூபர் கேட்க அதற்கு சுஹாசினி ஹிந்தி மொழி நல்ல மொழிதான், ஹிந்தி பேசுபவர்களும் நல்லவர்கள் தான் என கூறியது சர்ச்சையாகி விட்டது.
இதையறிந்த மூத்த பத்திரிக்கையாளரும் யூட்யூப் சேனலான வலைப்பேச்சில் பேசுபவரான பிஸ்மி கூறுகையில் மிகவும் கோபத்துடன் சுஹாசினி பேசுனதெல்லாம் ரொம்ப தப்பு, இன்னைக்கு அவர வாழ வைக்கிறதே இந்த தமிழகம் தான்.ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்னா மோடி, அமித்ஷா இவர்கள் எல்லாம் நல்லவர்களா? என்று கோபத்துடன் கேட்டார். எதாவது பிரச்சினைனா இந்தியாவை விட்டே போயிருவேன் என்று சொல்வார்கள், முதலில் இந்த தமிழ் நாட்டை விட்டு சுஹாசினியும் கங்கை அமரனும் தான் வெளியேற வேண்டும் என ஆக்ரோஷமாக பேசினார்.