என்னை கல்யாணம் செய்த போது அவரிடம் இருந்த பணம் இதுதான்!. மணிரத்னம் பற்றி சீக்ரெட் சொன்ன சுஹாசினி..

Published on: April 22, 2023
suhasini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ரத்தின சுருக்கமாக வசனங்களையும், காட்சிகளையும் வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் மணிரத்னம், துவக்கத்தில் சில படங்களை இயக்கியிருந்தாலும் மௌன ராகம் திரைப்படம் மூலம் புதிவிதமாக கதை சொல்லி ரசிகர்களை கவர்ந்தார். ஒளிப்பதிவு இவ்வளவு அழகாக இருக்குமா என்பதே இவரது படங்களை பார்த்த பின்புதான் பலருக்கும் தெரிந்தது. பலரையும் சினிமாவுக்கும் வரவழைத்தது.

அதன்பின் நாயகன், அக்னி நட்சத்திரம், பம்பாய், ரோஜா, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் என அவர் இயக்கிய படங்கள் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக மாறினார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. பொன்னியின் செல்வன் கூட அசத்தலான வெற்றியை கொடுத்துள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகவுள்ளது.

இவர் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுஹாசினி ‘என்னை திருமணம் செய்யும் போது மணியின் பேங்க் அக்கவுண்ட்டில் வெறும் 15 ஆயிரம் மட்டுமே இருந்தது. நான் 90 படங்களில் நடித்திருந்தேன். ஆனால், அவர் 3 படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். என்னிடம் இருந்த பணத்தை பற்றி அவர் எதுவுமே, எப்போதுமே கேட்டதில்லை. அதுதான் மணி’ என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.