தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இப்போதும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தனது சினிமா கேரியரில் வெற்றிகளை மட்டுமே கொடுத்து வந்த ரஜினிக்கு கடந்த சில வருடங்களாக சரியான வெற்றிப்படம் அமையவில்லை. சந்திரமுகிக்கு பின் அவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. விஸ்வாசம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சிவாவை அழைத்து அவரின் இயக்கத்தில் ‘அண்ணாத்த; படத்திலும் ரஜினி நடித்து பார்த்தார். ஆனால், அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.

அண்ணாத்த படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் தமன்னா, கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை அதாவது அவரின் 170 படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இப்போதுக்கு நிலைமை இதுதான்.

இந்நிலையில், இந்த படத்தில் அரை மணி வரும் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என ஞானவேல் ராஜா ஆசைப்படுகிறாராம். அந்த வேடம் சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும் என அவர் கருதுவதாக தெரிகிறது. ஆனால், ரஜினி சம்மதம் தெரிவிப்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் விரும்பினார். ஆனால், அதை வேண்டாம் என மறுத்துவிட்டார் ரஜினி.
சூர்யாவுக்கு என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!…
