இயக்குனர் அவதாரம் எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.... அதுவும் யாரை இயக்கியுள்ளார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் தான் பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் தமிழ் சினிமாவில் பூவிழி வாசலிலே என்ற படத்தில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் சுஜிதா சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை எல்லாம் பதிவு செய்து வருகிறார். இதுவரை நடிகை டப்பிங் ஆர்டிஸ்ட் என வலம் வந்த சுஜிதா தற்போது முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
அதன்படி இவர் இயக்கிய 2 விளம்பர படங்கள் தொடர்பான மேக்கிங் வீடியோ ஒன்றை இவரின் யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் பிரபல நடிகை ஹன்சிகாவை சுஜிதா இயக்கி உள்ளார். அரோமா பிராடக்ட் விளம்பரத்தில் பால், தயிர், நெய் போன்ற பொருட்களை ஹன்சிகா விளம்பரப்படுத்தும் விளம்பரத்தை சுஜிதா இயக்கி இதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
சுஜிதாவின் கணவர் ஒரு விளம்பர பட இயக்குனராம். இந்நிலையில் சுஜிதாவின் இயக்குனர் ஆசையை புரிந்துகொண்ட அவரின் கணவர் தானாக முன் வந்து சுஜிதாவிற்கு இந்த வாய்ப்பை கொடுத்தாராம். இந்த தகவலை சுஜிதாவே கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் சுஜிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.