Categories: Cinema News latest news

இவரை கட்டிப்பிடிச்சு நடிக்கறதுதான் எனக்குப் பிடிக்கும் – ஓபனாக பேசிய சுலக்‌ஷனா

இப்போது நயன்தாரா திரிஷாவை போல 30, 35 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர்தான் சுலக்‌ஷனா.

முன்னணி நடிகை

பாக்யராஜ் உடன் சுலக்‌ஷனா நடித்த தூறல் நின்னு போச்சு படம் சுலக்‌ஷனாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தை தந்தது. தம்பிக்கு எந்த ஊரு ராசாத்தி ரோஜாக்கிளி சிந்து பைரவி தூங்காதே தம்பி தூங்காதே ஆயிரம் நிலவே வா குவா குவா வாத்துகள் கெட்டி மேளம் இன்று நீ நாளை நான் வைகாசி பொறந்தாச்சு ஆவாரம்பூ கிழக்கு வாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுலக்‌ஷனா. துவக்கத்தில் ரஜினி கமல் சிவக்குமார் பாக்யராஜ் ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், பல ஆண்டுகளுக்கு பின் பிரசாந்துக்கு வைகாசி பொறந்தாச்சு படத்தில் அம்மாவாக நடித்தார். இப்போது, டிவி சீரியல்களில் சுலக்‌ஷனா நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Sulakshana

மனம் திறந்து பேசிய சுலக்‌ஷனா

நேர்காணல் ஒன்றில் பேசிய சுலக்‌ஷனா சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் சுலக்‌ஷனா, உயரமாக இருக்கிற சில நடிகர்களுடன் நடிக்கும்போது, எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும். காலில் பெரிய ஹீல்ஸ் போட வேண்டும். அதேபோல் அந்த நடிகர்களை கட்டிப்பிடித்து நடிப்பதும், சிரமமாக இருக்கும். தோள் மீது கைபோட்டு எட்டித்தான் கட்டிப்பிடிக்க வேண்டும். ஆனால் நடிகர் சிவக்குமார் எனக்கு சரியான ஜோடியாக இருப்பார். அவர் எனக்கு ஏற்ற உயரத்தில் இருந்ததால் கட்டிப்பிடித்து நடிக்கவும் வசதியாக இருக்கும். அவருடன் நடித்தால், ஹீல்ஸ் போட வேண்டியது இல்லை என்று கூறி இருக்கிறார்.

Sulakshana

திட்டு வாங்கி நடிப்பேன்

மேலும், நான் முதலில் நடித்த படம் மேஜர் சுந்தர்ராஜன் படம்தான். அம்மா இருக்கா என்ற படத்தில், சிவக்குமாருடன் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும்போது நான் காக்கா, குருவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன். டயலாக்குகளை கவனி என என்னை மேஜர் திட்டுவார். அடுத்து, இன்று நீ நாளை நான் படத்தில் எனக்கு மிக அருமையான ஒரு கேரக்டரை கொடுத்தார், என்றும் கூறி இருக்கிறார் சுலக்‌ஷனா.

Published by
elango