ஆடை எல்லாம் களைஞ்சிருக்கும்..சரி பண்ணுடினு சொன்னா என்ன சொல்லுவா தெரியுமா?.. சில்க் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நடிகை..
தமிழில் 1980 ஆம் வருடம் வெளிவந்த “வண்டிச்சக்கரம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறந்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தனது கட்டழகாலும், காந்த கண்களாலும் ரசிகர்களை கவிழ்த்துப்போட்டார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வலம் வந்தார். ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா மிகவும் செல்வாக்குள்ள நடிகையாக வலம் வந்தார். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. அவர் புகைப்படத்தை பயன்படுத்தினாலே இளைஞர்கள் கூட்டம் அத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் முந்தியடித்தது.
இவரை பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் வந்தாலும் சில்கை பற்றி பேட்டி கொடுக்கும் அனைவரும் சில்கை மாதிரி ஒரு நடிகையை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தான் சொல்லி வேதனைப்படுகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை சுலக்ஷனாவும் சில்க் ஸ்மிதா பற்றி ஒரு சில விஷயங்களை கூறினார். அதாவது சில்க் பழகுவதற்கு ஒரு குழந்தை மாதிரி என்றும் அவரை மாதிரி டிரஸிங்கில் யாராலும் அந்த அளவு பயன்படுத்த முடியாது என்றும் சரியா உடலமைப்பை கொண்டவர் என்றும் கூறினார்.
மேலும் அவரின் ஆடைகளை அவரே தேர்வு செய்து போடுவாராம். சரியாக படிக்க வில்லை என்றாலும் டிரஸிங் சென்ஸில் மிகவும் கவனமாக இருப்பாராம். இந்த நிலையில் படப்பிடிப்பு தவிர ஓய்வு நேரத்தில் உட்காரும் போது எதை பற்றியும் கவலைப்பட மாட்டாராம்.
ஆடைகள் எல்லாம் களைந்திருக்குமாம். சுலக்ஷனா மேலே ஒரு டவல் போட்டு உட்காருடினு சொல்வாராம். அதற்கு சில்க் பரவாயில்லக்கா, பார்த்தால் பார்த்துட்டு போகட்டும்னு ஒரு சின்னப்புள்ள மாதிரி சொல்லுவாராம். இதை ஒரு பேட்டியில் சுலக்ஷனா கூறினார்.