சன் பிக்சர்ஸ் கட்டிடத்தில் காலியா இருக்கும் 8வது மாடி!. கலாநிதிமாறனுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..

80களின் இறுதியில் தூர்தர்ஷனுக்கு பின் லோக்கல் கேபிள் சேனல்களில் படம் பார்த்துகொண்டிருந்தார்கள் ரசிகர்கள். அப்போதுதான் 1993ம் வருடம் சன் தொலைக்காட்சி நிறுவனம் கலாநிதிமாறனால் துவங்கப்பட்டது. இவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரன் ஆவார். தமிழில் ஒரு தனியார் டிவி சேனல், நாள் முழுவதும் படம், பாடல்கள் என ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.,
முதலில் சன் தொலைக்காட்சியில் துவக்கியது பின்னர் கே டிவி, ஆதித்யா, சன் நியூஸ் போன்ற பல சேனல்களாக அதிகரித்தது. அதோடு மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல சேனல்களை உருவாக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இந்தியாவில் ஒரு முக்கிய கார்ப்பரேட் நிறுவனமாக சன் நெட்வொர்க் மாறியது. சேனல்கள் மட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் என்கிற பெயரில் புதிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினியின் எந்திரன், விஜயின் சுறா, சூர்யாவின் சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களையும் இந்நிறுவனம் தயாரித்தது. மேலும் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த, ஜெயிலர் போன்ற படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்தது. இப்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படமும் தயாராகி வருகிறது.

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து 700 கோடிக்கும் மேல் வசூல் செய்ததால் மகிழ்ச்சியடைந்த கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சனுக்கு ஒரு புதிய கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். இந்நிலையில்தான், சன் நெட்வொர்க் நிறுவனம் அமைந்துள்ள கட்டிடம் தொடர்பான ஒரு செய்தி வெளியே கசிந்திருக்கிறது.
சன் நொட்வொர்க்கின் அலுவலகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செயல்பட்டு வருகிறது. 2011ம் வருடம்தான் அங்கு அந்த பில்டிங் உருவானது. இதில் 11வது மாடியில்தான் கலாநிதிமாறனின் அலுவலகம் செயல்படுகிறது. 8ம் நம்பர் அபச குணம் என சொல்வார்களோ என்னவோ, இந்த கட்டிடத்தில் உள்ள 8வது தளத்தை எதற்குமே பயன்படுத்தாமல் 14 வருடங்களாக பூட்டி வைத்திருக்கிறார்களாம்.
சமீபத்தில் கலாநிதி மாறன் அலுவலகம் செயல்படும் 11வது மாடியில் பாரமத்து பணிகள் நடக்கவே 8வது அறைக்கு கலாநிதியின் அலுவலகம் மாற்றப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி - அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தின் புரமோ வீடியோவில் கலாநிதி மாறனோடு அவர்கள் நடந்து வருவது அந்த கட்டிடம்தான் என்கிறார்கள்.
இனிமேலாவது 8ம் நம்பர் செண்டிமெண்ட் பார்க்காம இருந்த சரி!….