தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறும்படம் எடுத்து வந்த அவர் மாநகரம் படம் மூலம் இயக்குனராக மாறி முதல் படத்திலேயே அதிர வைத்தார். இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்தது.
அதன்பின் கார்த்தியை வைத்து அவர் இயக்கி வெளியான கைதி படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதுவரை யாரும் பாத்திராத திரைக்கதையை அமைத்து அசத்தியிருந்தார். இந்த படத்தை பார்த்த விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடித்த திரைப்படம்தான் மாஸ்டர். இந்த படமும் வசூலை அள்ளியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படும் லைக்கா நிறுவனம்! ‘தலைவர் 170’ ல் கல்லா கட்ட இதுதான் ஒரே வழி
அடுத்து கமல்ஹாசன் படத்தை இயக்குமளவுக்கு லோகேஷ் முன்னேறினார். கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாக இப்படம் அவருக்கு அமைந்தது.
அதன்பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படமும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து லோகேஷ் கனகராஜ் யாரை இயக்கப்போகிறார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ரஜினியை அவர் இயக்கவுள்ளார் என சொல்லப்பட்டாலும் ரஜினி அடுத்து ஞானவேல் இயகக்த்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் முடிந்தபின்னர்தான் அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க முடியும். எனவே, அந்த இடைவெளியில் லோகேஷ் வேறு ஹீரோவை வைத்து படம் இயக்குவாரா என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், இதுபற்றி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..
இந்நிலையில், ரஜினியின் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஞானவேல் படத்தை முடித்த பின் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றியை கொடுத்து கோடி கோடியாக அள்ளிய சன்பிக்சர்ஸ் லோகேஷ் – ரஜினி படத்தை தயாரித்து மீண்டும் பணத்தை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..