அண்ணாத்த படம் பெருசா லாபம் இல்ல!.. ரஜினியை நெருக்கும் சன் பிக்சர்ஸ்....
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தீபாவளிக்கு வெளியாவது மகிழ்ச்சி என்றாலும் திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது நவம்பர் மாதமும் நீடிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஓவர் சீஸ் எனப்படும் எனப்படும் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இன்னும் பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், கேரளாவிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.
எனவே, திட்டமிட்டபடி அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸானால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தில் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்படுகிறது. இதை கணக்குப்போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை காரணம் காட்டி ரஜினியிடம் மீண்டும் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளதாம். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ரஜினி ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, அண்ணாத்த படத்திற்கு பின் அவர் யாருடையை தயாரிப்பில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.