ரஜினியின் புதிய பட அறிவிப்பு... மாஸான வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்...
தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிதாக ரஜினி ரசிகர்களையே கவராத நிலையில், தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி.
பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒருபக்கம், சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு விட்டது.
ரஜினியின் 169 படத்தை நெல்சன் இயக்குவது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இது தொடர்பாக ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், நெல்சன், அனிருத் ஆகியோர் கோட் சூட், கூலிங்கிளாஸ் என ஸ்டைலாக நிற்க, ரஜினியும் அதே கெட்டப்பில் சேரில் ஸ்டைலாக உட்கார்ந்திருப்பது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.