
Cinema News
ரஜினிக்கு காரை பரிசாக வழங்கிய சன்பிக்சர்ஸ்! எப்பா அல்ட்ரா டீலக்ஸ் காரா இருக்கும் போலயே! நெல்சா என்ன இது?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய்லர். இந்தப் படம் ரஜினி, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் ,யோகிபாபு என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்து வெளியான படம். படம் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடியையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
சினிமா வரலாற்றிலேயே ஜெய்லர் திரைப்படம் சாதனை செய்த படமாக மாறியது. அதுவும் ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தந்த படமாகவும் அமைந்தது. இந்த வெற்றியை ஜெய்லர் படக்குழு கொண்டாடிக் கொண்டு வருகின்றனர்.
இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்த ரஜினி ஜெய்லர் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். பார்ட்டியுடன் வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள். இந்த நிலையில் விக்ரம் படத்திற்காக எப்படி லோகேஷுக்கு கமல் கார் வழங்கினாரோ அதே போல் நெல்சனுக்கும் ரஜினி கார் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள்.
ஆனால் விக்ரம் படம் கமலின் சொந்த தயாரிப்பு. அதனால்தான் கமல் வழங்கினார். ஆனால் ஜெய்லர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தர வேண்டும். ரஜினி எப்படி வழங்குவார்? என்றும் கூறப்பட்டது.

rajini
இந்த நிலையில் இன்று ஜெய்லரின் மாபெரும் வெற்றியால் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினிக்கு பி.எம்.டபுள்யூ எக்ஸ் 7 சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கிறார். அதன் சம்பந்தமான வீடியோ வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனை டீலில் விட்டீர்களா? என்று கேட்டு வருகின்றனர். இருந்தாலும் கூடிய சீக்கிரம் நெல்சனுக்கும் ஒரு பெரிய பரிசை கலாநிதி மாறன் வழங்குவார் என எதிர்பார்க்க படுகிறது.