லோகேஷுக்கு பல கோடி சம்பளம்!.. ஸ்கெட்ச் போட்டு ரஜினி படத்தை தூக்கிய சன் பிக்சர்ஸ்…

by சிவா |   ( Updated:2023-05-03 13:09:20  )
sun picutures
X

sun picutures

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என ரசிகர்கள் சொல்ல துவங்கிவிட்டனர். ஏனெனில், இதுவரை காணாத ஒரு புதிய உலகை அவர் ரசிகர்களுக்கு காட்டி புதிய அனுபவத்தை கொடுக்கிறார்.

விக்ரம் படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜை மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. பாலிவுட், டோலிவுட் என பல இடங்களிலும் அவருக்கு அழைப்பு வருகிறது. லியோ படத்தை முடித்தவுடன் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்திற்கு பின் லோகேஷ் ரஜினியை இயக்கவுள்ளார். லோகேஷ் - ரஜினி இணையும் படத்தை தயாரிக்க பல சினிமா நிறுவனங்களும் மோதியதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ரஜினிக்கு ரூ. 105 கோடியும், லோகேஷ் கனகராஜுக்கு ரூ.40 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த மற்றும் தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்நிலையில், ரஜினி படத்தை வளைக்க சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான் வெளியே தெரியவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் லோகேஷ் கனகராஜும், இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு லோகேஷுக்கு சம்பளமாக ரூ.10 கோடியை கொடுக்க முன் வந்துள்ளது. அந்த படத்தில் லோகேஷ் வருவது சில காட்சிகளில் மட்டுமே. அதற்கு இவ்வளவு சம்பளமா? என சினிமா உலகினர் வாயை பிளக்கின்றனர்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல நடிப்பதற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுத்து லோகேஷை குஷிப்படுத்தி லோகேஷ் - ரஜினி பட பிராஜெக்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் பக்கம் வளைத்துள்ளதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Next Story