சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாவது மகிழ்ச்சி என்றாலும் திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது நவம்பர் மாதமும் நீடிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஓவர் சீஸ் எனப்படும் எனப்படும் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. இன்னும் பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லாமல் இருந்தது. அதேபோல், கேரளாவிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லாமல் இருந்தது.
எனவே, திட்டமிட்டபடி அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸானால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தில் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. இதை கணக்குப்போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை காரணம் காட்டி ரஜினியிடம் மீண்டும் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்கும் படி கோரிக்கை வைத்ததாகவும், ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது.
ஆனால், தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. சில வெளிநாடுகளில் இன்னும் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டது. மேலும், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அங்கு மாஸ்டரை விட அதிக வசூல் செய்துள்ளது. அதேபோல், கேரளாவில் வருகிற 25ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளது. அங்கும் அண்ணாத்த சில கோடிகளை வசூல் செய்ய வாய்ப்புண்டு.
எனவே, இது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…