Categories: latest news

Sun Serial: மருமகள் முதல் மூன்று முடிச்சு வரை… சன்டிவி தொடர்களின் புரோமோ.. இத பாருங்க!..

Sun Serial: டிஆர்பியில் சக்கை போடு போட்டு வரும் சன் டிவியின் டாப் 5 தொடர்களின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ குறித்த தொகுப்புகள்.

மருமகள்: ஆதிரை அப்பாவிற்கு தான் கிராமத்தில் நிலம் இருக்கே. அந்த நிலத்தை கொடுக்க வேண்டியது தான் என வேல்விழி கூறுகிறார். இதை ஆதிரையின் அம்மா அவரிடம் வந்து உங்க அப்பாவை இதுல திட்டம் போட்டு மாட்ட வைத்திருக்கிறார்கள் என்கிறார். ஆதிரையிடம் எனக்கு பிடிமானம் இல்லாமல் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என கடன் கொடுத்தவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..

மூன்று முடிச்சு: சுந்தரவல்லி ஒதுங்கி நிற்க அருணாச்சலம் வந்து கேட்கிறார். அவ இருக்கிற இடத்தில என்னால வர முடியாது என கூறி விடுகிறார். அர்ச்சனாவிடம் சூர்யா சார் என் கழுத்தில் தாலி கட்டுவார் என நானே நினைக்கல என்கிறார் நந்தினி. அர்ச்சனா கோபத்தில் நந்தினியை அடிக்க பாய நடுவில் வந்து தடுத்து விடுகிறார் சூர்யா. யாரை அடிக்க பார்க்கிற அவள் என்னுடைய பொண்டாட்டி நந்தினி என்கிறார்.

சிங்கப்பெண்ணே: ஆனந்தி தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் எவ்வளவு தடை வந்தாலும் அழகன் யார் என்பதை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்கிறார். மகேஷிடம் மித்ரா அழகன் இங்க இருப்பானு எப்படி சொல்ற எனக் கேட்கிறார். மித்ரா அன்புதான் அழகன் என்கிறார். எல்லா ஆண்களும் சீட்டை பெட்டியில் போட மகேஷ் அழகா நீ இந்த கூட்டத்தில் தான் இருக்க. உன் சாப்டர் இன்னையோட முடிய போகுது என்கிறார்.

இதையும் படிங்க: Amaran: அமரன் படத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு… நெத்தியடி பதிலால் தந்த இயக்குனர்

சுந்தரி: அனு ஜானகியிடம் எதிரியாய் இருந்தாலும் சேவை செய்கிறேன் எனக் கூறுகிறார். சுந்தரியால் ஜெயிலுக்கு போன ஆள் என்னை உள்ளே அனுப்பிவிட்டு நீ சாதனை செய்றீயா என கருவிக்கொண்டு இருக்கிறார். அனு எனக்கு ஒருத்தன் துரோகம் செஞ்சானு சொன்னேன்ல. அது இவன்தான் என்கிறார்.

கயல்: எழிலின் அம்மா, என் மகனை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டு அவ இந்த வீட்ல சந்தோஷமா இருந்துருவாளா. முடியவே முடியாது.  அவ குடும்பத்துக்கு நான் கொடுக்கப் போற பிரச்சனை இல்ல என் காலை பிடித்து கெஞ்சுவா என்கிறார். மூர்த்திக்கு கொடுத்த காசை கடன்காரரிடம் கேட்டு வாங்க சொல்கிறார் எழிலின் அம்மா. எனக்கு முன்னாடியா சவால் போடுற கயல். இந்த முறை நீ தோக்கப் போவது உறுதி என்கிறார்.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago