Sun serials: சன் டிவி சீரியல்களான டிஆர்பி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோ அப்டேட் குறித்த தொகுப்புகள்.
சுந்தரி: கிளைமேக்ஸை நெருங்கும் சுந்தரி தொடரில் அனுவை கார்த்திக் கண்டுபிடித்து விடுகிறார். அவரை சந்திக்க இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோட்டில் ஒளிபரப்பப்படலாம்.
இதையும் படிங்க: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் சீரிஸ் டூ சினிமா… இத மிஸ் பண்ணிடாதீங்க!..
கயல்: சரவண வேல் குடும்பத்தினர் எழிலை பார்த்து கோபப்படுகின்றனர். சரவணவேல் எழிலை திருமணம் செய்து கொள்வேன் என சபதமிடுகிறார். கயலை பார்த்து அவ அப்பா உன் அப்பாவுக்கு செஞ்ச துரோகத்தைதான் இவ செஞ்சிருக்கா என சரவணவேல் அம்மா கூறுகிறார். கயல் பிரச்னைக்கு எங்க அப்பா பெரியப்பா காரணமா இருக்காது. வேற ஒரு மர்மம் இருக்கலாம் என்கிறார்.
மருமகள்: பிரபு நான் சாமியை பார்த்து செல்கிறேன். அதற்குள் தனிக்குடித்தனத்திற்கு சம்மதிக்க வைக்கணும் என சத்தமிடுகிறார். பிரபு அம்மாவிடம் சித்தப்பா உன் மருமக அவ அப்பா வீட்டுக்கே ஓடிட்டாலாமே என்கிறார். ஆதிரை நான் ஆசைப்பட்ட வாழ்க்கை இது இல்ல. வேற எதுவும் கேட்காதீங்க என்கிறார்.
இதையும் படிங்க: Biggboss Tamil: மாஸ் காட்டுறேனு மக்கா இருக்காதீங்க… தர்ஷிகாவை பொளக்கும் ரசிகர்கள்…
மூன்று முடிச்சு: அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி நந்தினி வீட்ட விட்டு போயிட்டாளாமே என்கிறார். மினிஸ்டர் தன்னுடைய ஆட்களை வைத்து நந்தினி அப்பாவுக்கு கால் செய்து உன் பொண்ணை காணலை என விஷயத்தை உடைத்து விடுகின்றனர். நந்தினியை வாயைக் கட்டி அருணாச்சலம் வீட்டு காரில் போட்டுவிடுகின்றனர்.
