கயல் முதல் மருமகள் வரை… சன் டாப் 5 தொடர்களின் புரோமோ… இத பாருங்க!..

sun serials
Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் ஐந்து தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோக்களின் தொகுப்பு.
கயல்: கயல் யோசனையுடன் அமர்ந்திருக்கிறார். அன்பு மூர்த்திக்கு கால் செய்து பைனான்சியர் வீட்டில் வந்து அமர்ந்திருப்பதாக கூறுகிறார். அனு கயலின் பெரியப்பாவுக்கு கால் செய்து தாத்தா வீட்டில் பிரச்சனை நடப்பதாக கூறுகிறார். எழிலின் அம்மா தயரிடம் உங்க வீட்ல பிரச்சனை நடக்குது என்னவென்று சொல்லவா என கேட்கிறார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா டிக்கெட் எடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிங்க… ஷாக் ஆகிடுவீங்க..
மூன்று முடிச்சு: சுந்தரவல்லி நந்தினியை டார்ச்சர் செய்ய வேண்டும். அதை என் கண்ணால் பார்த்து ரசிக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார். சூர்யாவிடம் நந்தினி அதை நான் ஏன் எடுத்து வைக்கப் போகிறேன் என கேட்கிறார். புஷ்பா மற்றும் நந்தினி சமையலறையில் இருக்க புஷ்பாவை வெளியில் வர சொல்கிறார் மாதவி.
மருமகள்: பிரபு மற்றும் ஆதிரை திருமணம் முடிய வேள்விழி மயக்கம் அடைந்து விடுகிறார். அவரை சித்தப்பா தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல கல்யாணத்தை நிறுத்த தான் இந்த நாடகம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். வேள்விழியின் இந்த நிலைமைக்கு காரணமான ஆதிரை மற்றும் பிரபுவை வாழ விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார் சித்தப்பா. வீட்டில் தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்க நல்ல வேலை காசு போட சொல்லவில்லை என பிரபு நிம்மதி அடைகிறார்.
இதையும் படிங்க: அந்த ஒரு படம்!… அடுத்த 5 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன்?!… மனம் திறந்த கெத்து தினேஷ்!…
சுந்தரி: கலெக்டர் ஆபிஸில் வேலை செய்யும் உங்களுக்கே இவ்வளவு பிரச்சனை இருந்தால், சாதாரண மக்களின் நிலை என்ன என சுந்தரி பேசிக் கொண்டிருக்கிறார். அனுகுட்டியிடம் வேணுமென்றே அனு தோற்பதாக அங்கிருக்கும் தாத்தா சொல்கிறார். சுந்தரி அவன் மத்தவங்கள பயமுறுத்தி தானே காரியத்தை சாதிக்கிறான். அந்த வழியை தான் நானும் எடுக்க இருக்கிறேன் என்கிறார்.
சிங்கப்பெண்ணே: அன்பு வெளிநாட்டிற்கு செல்வதை என்னால் ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை என ஆனந்தி கூறுகிறார். அன்புவிடம் ஆனந்தி கெஞ்சி கொண்டிருக்கிறார். அன்புவின் தங்கை நீங்க எங்க அண்ணன காதலிக்கிறீங்களா எனக் கேட்கிறார். இல்லனா ஒரு பையன் வீட்டில ஒரு பொண்ணு இவ்வளவு நம்பிக்கையா தாங்க மாட்டாள் எனக் கூறுகிறார்.
அன்பு செயினை வைத்துக்கொண்டு இந்த அழகன் உன்னை கஷ்டப்படுத்துறவன் இல்லை ஆனந்தி. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க தன்னையே அழிச்சுகிறவன் தான் எனக் கூறி அன்பு கதறி அழுகிறார்.
இதையும் படிங்க: Kanguva: அட்லீஸ்ட்!.. அந்த வாய வச்சுட்டாவது சும்மா இருந்தீங்களா?!... கங்குவா டீமை வச்சு செய்யும் ப்ளூ சட்டை!...