மொக்கை வாங்கிய விஜய் டிவி…மீண்டும் முதலிடத்தினை பிடித்த சன் டிவி!...
சீரியல்கள் தங்களின் டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ள வாராவாரம் புதிய யுத்திகளை கையாண்டு வரும். அந்த வகையில் சில வாரங்களாக விட்ட இடத்தை சன் டிவி மீண்டும் பிடித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வந்த சிறகடிக்க ஆசை. ஆனால் தற்போது சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் 9.03 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியின் கயல் சீரியல் 8.58 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க: கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..
மேலும், மூன்றாவது இடத்தையும் 7.63 புள்ளிகளை பெற்று சன் டிவியின் சின்ன மருமகள் தொடர் பெற்றுள்ளது. அடுத்து முடிவை நோக்கி சென்று கொண்உ இருக்கும் வானத்தைப் போல சீரியல் நான்காவது இடத்தை 7.52 புள்ளிகளுடன் பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து சன் டிவியின் சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தை 7.21 புள்ளிகளுடன் பெற்று இருக்கிறது. அடுத்து ஆறாவது இடத்தினை மல்லி சீரியல் 7.06 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை பெரிய சரிவை சந்தித்து தற்போது ஏழாவது இடத்தை 6.90 புள்ளிகளுடன் பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்களின் சாதனையை சமன் செய்த நடிகை ஊர்வசி… விருதில் சாதித்த சுவாரஸ்யம்…
இதற்கு முக்கிய காரணமாக இந்த டாப் ஹிட் தொடர்கள் தங்களுடைய முதன்மை கதையை விட்டு வேறு டிராக்கில் பயணிப்பதே ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சிறகடிக்க ஆசை தொடரில் இன்னும் பல ரகசியங்கள் ரகசியங்களாகவே இருப்பது ரசிகர்களை வெறுப்படைய செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.