சன் டிவியில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம்.... எத்தனை கோடி தெரியுமா?
கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கஞ்சா கடத்தலை காமெடியுடன் கூறிய இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வெற்றிப்படமாகியது.
இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு பிரியங்கா அருள்மோகன், டிவி தொகுப்பாளினி அர்ச்சனா,தீபா சங்கர்,யோகிபாபு,வினய் ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கிட்னி கடத்தும் கும்பலுக்கு தலைவன் போல் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் எதற்காக செய்கிறார் என்பதுதிரைப்படத்தை பார்க்கும் போதுதான் தெரியவரும். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் ரூ.25 கோடி விலைக்கு வாங்கியுள்ளது. இது தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதால் தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கு டாக்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.