TRP ரேட்டிங்கில் விஜய் டிவியை தூக்கி சாப்பிட்ட சன் டிவி...
தமிழ் டிவி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு டெலிகாஸ்ட் செய்து வருகின்றன டிவி சேனல்கள்.வித விதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டாலும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிவது 2 வகை நிகழ்ச்சிகள் தான்.ஒன்று கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள், இன்னொன்று சீரியல்கள்.
பல சேனல்கள் சீரியல்கள் இருந்தாலும் நேரடி போட்டி என்னவோ ரசிகர்களின் அபிமானம் பெற்ற 2 சேனல்களுக்கு மத்தியில் தான்.சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவிக்கு தான் போட்டி அதிகம்.
பல சூப்பர் ஹிட் சீரியல்கள் இந்த 2 சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகின்றன. பெரும்பாலும் TRP ரேட்டிங் லிஸ்ட்டில் டாப் 10 இடங்களில் டாப் 5 லிஸ்ட்டில் இந்த சேனல்களின் 2 சீரியல்களாவது மாறி மாறி இடம் பெற்றுவிடும்.
இந்நிலையில் தமிழ் சீரியல்களின் கடந்த வார TRP ரேட்டிங் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.இதில் அதிர்ச்சி தர கூடிய விஷயம், டாப் 5 லிஸ்ட்டில் விஜய் டிவி-யின் ஒரே ஒரு சீரியல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதுவும் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தில் உள்ள சன் டிவியின் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாமிடத்தில் சுந்தரி, மூன்றாம் இடத்தில் வானத்தை போல, நான்காம் இடத்தில் ரோஜா உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் உள்ளன. டாப் 5 லிஸ்ட்டில் 5-ஆம் இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்.