Categories: latest news television

ஆல்யா மானசாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே… சன் டிவியில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை இவங்க தானாம்…

தமிழ் ரசிகர்களுக்கு சீரியல் மீது இருக்கும் காதல் என்னவோ குறைவதாக தான் இல்லை. தொடர்ச்சியாக நாளுக்கு நாள் வித்தியாசமான சீரியல்கள் புதிதாக வந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் இல்லத்தரசிகளை கவர்வதற்காகவே அவர்கள் ஓய்வில் இருக்கும் நேரத்தில் அதிகளவிலான சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

காலை 11 மணிக்கு மேல் இருந்து 3 மணி வரையும், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 10.30  மணி வரை என சீரியல் வரிசை வரிசை கட்டி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பிரபல சீரியல் நடிகைகளுக்கான மவுஸ் இன்னும் ரசிகர்களிடம் குறையவில்லை. அந்த வகையில் அவர்களுக்கு நாள் ஒன்றின் சம்பளமே பெரியளவிலான தொகை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதிலும் சன் டிவி சீரியல்கள் தொடங்கி விட்டால் கண்டிப்பாக 500 எபிசோடு தாண்டும் என்பதால் நடிகை, நடிகர்களும் ஆர்வமுடன் ஒப்புக்கொள்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நடிகை சுருதிராஜ் இருப்பதாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தென்றல் சீரியல் மூலம் சன் டிவிக்குள் வந்தவர் சுருதிராஜ்.

தற்போது லட்சுமி சீரியல் மூலம் சன் டிவியில் நடித்து வரும் சுருதிக்கு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. ஜீ தமிழ் சீரியலில் வில்லியாக இருந்து சன் டிவிக்கு கயல் மூலம் ஹீரோயினாக வந்தவர். கிடைத்த புகழை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார்.

டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடித்த புகழ் பெற்றார். தொடர்ந்து அவருக்கு அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தின் வாய்ப்பும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து குழந்தை பேருக்காக பிரேக் எடுத்தவர் சன் டிவியில் இனியா தொடர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ஆல்யாவிற்கு நாள் ஒன்றுக்கு சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரியலாக்கு 12 ஆயிரம் ரூபாயும், எதிர்நீச்சல் மதுமிதாவுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan