latest news

தமிழ் சின்னத்திரை சுவாரஸ்யம்: நோ லவ்… சூழ்நிலையால் ஜோடியாகி ஹிட் அடித்த டாப் 4…

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இன்னமும் அவர்கள் எடுக்கும் கதையை நம்பி தினமும் பார்க்கும் தாய்மார்கள் தான் இங்க எக்கசக்கம். அந்த வகையில் நிறைய சீரியல்கள் என்ன எடுக்கிறோம் என்றே தெரியாத லெவல் செல்கிறது. 

முன்பெல்லாம் சீரியல்களின் கதை 2 மாசம் கடந்தும் கூட ஒரு குறிப்பிட்டு காட்சியை ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதை மாற்றும் விதமாக உள்ளே வந்தது விஜய் டிவி. ஓவர் வில்லி ரோல் இல்லாமல் சாதாரண மக்கள் கதையாக இன்னமும் ஒளிபரப்பி வருவதால் பலர் விஜய் பக்கம் தாவிவிட்டனர். 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியிலும் வித்தியாசமான கதைகளத்தில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது லவ் செய்யாமல் சூழ்நிலையால் கல்யாணம் செய்துக்கொண்ட ஜோடி ரசிகர்களிடம் வெகு பிரபலமாகி வருகின்றனர்.

அந்த வகையில் லேட்டஸ்ட் லிஸ்ட்டில் நான்கு ஜோடிகள் பட்டியலின் முதலிடத்தில் இருக்கின்றனர். அய்யனார் துணை சீரியல் சோழன் நிலாவுக்கு தான். இவர்கள் திருமணம் செல்லாது என்றாலும் சோழன் நிலா மீது லவ்விலும், நிலா சோழன் மீது ஒருவிதமான பாசத்திலும் டாம் அண்ட் ஜெர்ரி போல இருவரும் வலம் வருகின்றனர். 

அடுத்து, மகாநதி சீரியலின் காவேரி விஜய்க்கு தான். விகா என நிறைய ரசிகர்கள் இன்ஸ்டாவில் பேஜ் தொடங்கி இவர்கள் ரொமான்ஸை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் ரசிகர்களிடம் செம ஹிட். ஆனால் இவர்கள் இருவரும் இன்னமும் சரியாக இணைந்து வாழவில்லை. பல கட்டங்களை தாண்டி குழந்தை பிறக்க இருந்த நிலையில் விபத்து நடந்து காவேரிக்கு எல்லாம் மறந்துவிட்டது. 

விஜயுக்கும் அவள் இறந்துவிட்டாள் எனக் கூறப்பட்ட நிலையில் சீரியல் 5 வருடம் ஓடிவிட்டதாக காட்டி தற்போது இளம் ஜோடி பேரண்ட்ஸாகி லவ் செய்ய போகிறார்கள் போல. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ்2 ராஜி மற்றும் கதிர். இவர்களுக்கும் இதே கதை தான். 

முறைத்துக்கொண்டு திரிந்தவர்களுக்கு கோமதி கல்யாணம் செய்து வைக்க தற்போது இருவரும் காதல் ரொமான்ஸ் செய்ய தொடங்கிவிட்டனர். இவர்களை தொடர்ந்து தற்போது அழகே அழகு சீரியலின் சுரேஷ் அழகுமதிக்கும் திடீர் திருமணம் முடிந்துள்ளது. அப்போ அடுத்து இன்னும் சில மாதங்களில் ரொமான்ஸ் பத்திக்கும் என்றே நம்பப்படுகிறது.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago