சன் டிவி சூப்பர் ஹிட் தொடர்களின் இன்றைய ப்ரோமோ அப்டேட்… மிஸ் பண்ணிடாதீங்க..

by Akhilan |
sunserials
X

sunserials

Sun serials: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் கயல், மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே மற்றும் மருமகள் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ தொகுப்புகள்.

மூன்று முடிச்சு

சூர்யா அருணாச்சலத்திடம் நாளைக்கு காலையில நந்தினி இல்லம்னு பிளக்ஸ் வச்சிடுவேன் என்கிறார். இதை கேட்ட சுந்தரவல்லி ஏய் என கத்துகிறார். இதில் கடுப்பாகும் நந்தினி கையெடுத்து உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன். உங்க அம்மாவை வெறுப்பேத்த என்ன பயன்படுத்திக்காதீங்க. அருணாச்சலத்திடம் சூர்யா இதுக்கு முன்னாடி அந்த தாய்க்கிழவி என்னென்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சும் நீங்க இப்படி கேட்கிறீர்களா என்கிறார்.

சிங்கப் பெண்ணே

ஆனந்தியை பார்க்க அன்பு வந்திருக்கிறார். ஆனந்தியிடம் பேசிக் கொண்டிருக்கும் அவர் அப்பா மத்தவங்க உன்ன தப்பா சொன்னா நான் நம்பிடுவேன் நீ எப்படி நினைக்கிற என்கிறார். ஆனந்தி தன்னுடைய தோழிகளிடம் ரொம்ப பாவம் அவர்.

இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… ரோகிணி மீது வலுக்கும் சந்தேகம்… செந்தில் எடுத்த திடீர் முடிவு!..

எனக்காக எவ்வளவு சிரமப்படுகிறார். எனக்கு அவரிடம் பேசணும் போல இருக்கு என்கிறார். அந்த நேரத்தில் அன்பு ஆனந்தியை கூப்பிடுகிறார். ஆனந்தி மற்றும் அன்பு பேசிக்கொண்டிருக்க அதை பார்த்து விடுகிறார் மித்ரா. இந்த நேரத்துல இவன் ஏன் இங்கே வந்தான். இந்த பட்டிக்காடு போய் அவன்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கு என கூறுகிறார்.

மருமகள்:

ஆதிரையின் வீட்டில் பிரபு மற்றும் அவருடைய அப்பா ரூமிற்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வேல்விழியையும் அதே ரூமில் மறைத்து வைத்திருக்கிறார். வேல்விழி மாட்டிகிட்டா நாம என்ன ஆவோம் என பயந்து கொண்டிருக்கிறார். பிரபு மற்றும் அதிரை அப்பா பேசுவதை வேல்விழி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

singapennae

singapennae

வீட்டில் ஆதிரை என் அப்பாகிட்ட பேசி அவரையே தூது விடுறீங்களா. வீட்டுக்கு வாங்க பாத்துக்குறேன் என்கிறார். அந்த நேரத்தில் பிரபுவின் வண்டி சத்தம் கேட்கிறது. நீங்க ஆதிரையிடம் பேசுங்க மாமா என பிரபு கூற அவரும் சரி என கூறுகிறார். அந்த நேரத்தில் வேல்விழி தும்மி விட அவர் இருப்பதை பிரபு பார்த்துவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவரை பிரபு சத்தம் போடுகிறார்.

Next Story