சுனைனாவை விடாமல் டார்ச்சர் செய்த பிரபல நடிகையின் தம்பி… இவரா இப்படி நடந்துக்குட்டாரு!!
சுனைனா
சுனைனா கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “குமார் VS குமாரி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “பெஸ்ட் பிரண்ட்ஸ்” என்ற திரைப்படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்தார். இதன் பிறகுதான் தமிழில் “காதலில் விழுந்தேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சுனைனா.
இதனை தொடர்ந்து தமிழில் “மாசிலாமணி”, “வம்சம்”, “நீர் பறவை”, “சில்லுக் கருப்பட்டி” போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்திருக்கும் சுனைனா, தமிழின் மிகப் பிரபலமான நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சுனைனா தற்போது “ரெஜினா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் சுனைனா முன்னணி நடிகையாக நடிக்கிறார்.
டார்ச்சர் கொடுத்த தேவயானியின் தம்பி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சுனைனா, நடிகர் நகுல் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “காதலில் விழுந்தேன்”, “மாசிலாமணி” ஆகிய திரைப்படங்களில் நடிக்கும்போது எனக்கு 17 வயது இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு தமிழ் தெரியாது. மிகவும் அமைதியாகவே இருப்பேன். செட்டில் யாரிடமும் பேசமாட்டேன்.
ஆனால் நகுல் என்னிடம் வந்து பேசிக்கொண்டே இருப்பார். நான் மௌனத்தை கலைத்துவிட்டு கலகலவென பேசவேண்டும் என்று அவர் முயன்றுகொண்டே இருந்தார். அவர் Irritate செய்தார் என்று சொல்லமுடியாது. ஆனால் நான் எனது மௌனத்தை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என நினைத்து அவ்வாறு செய்தார்” என்று அப்பேட்டியில் சுனைனா கூறியுள்ளார்.
“காதலில் விழுந்தேன்”, “மாசிலாமணி” ஆகிய திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. மேலும் அத்திரைப்படங்களில் நகுல், சுனைனா ஆகியோருக்கிடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
இதையும் படிங்க: நான் அடிச்ச பத்து பேருமே DON தான்- நாட்டு நாட்டு பாடல் எந்தெந்த பிரம்மாண்ட படங்களுடன் போட்டி போட்டது தெரியுமா?