நாள்முழுக்க உட்கார வச்சு சந்தானத்தை கடுப்பேத்திய இயக்குனர்.. பதிலுக்கு நடந்ததுதான் ஹைலைட்டு

Published on: November 15, 2024
santhanam
---Advertisement---

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொண்டவர் நடிகை சந்தானம். சினிமாவிற்கு வருவதற்கு முன் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து தனக்கான ரசிகர்களை தக்க வைத்திருந்தார். அதில் நடிக்கும் போதே ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் சந்தானம். அந்த நிகழ்ச்சியில் சந்தானத்தின் பெர்ஃபார்மன்ஸை பார்த்த சிம்பு வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தார்.

முதல் அறிமுகம்: முதன் முதலில் சிம்புவின் படத்தில்தான் காமெடி நடிகராக அறிமுகமானார் சந்தானம். தொடர்ந்து சிம்புவின் படங்களில் நடித்து பின் அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபலங்களின் படங்களிலும் நடித்தார். சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் 2004 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: பெரிய ஸ்டார்களுக்கு அவ்வளவுதான் ஞானமா?!… சொம்பு தூக்கிங்க அடக்கி வாசிங்க… பொளந்து தள்ளிய பிரபலம்!..

முதல் படமே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதன் பின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், பில்லா, தலைவா, போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகமாக்கிக் கொண்டார். அதிலிருந்து இப்போதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம்.

சுந்தர் சி பகிர்ந்த தகவல்: இந்த நிலையில் சந்தானத்தை பற்றி ஒரு தகவலை சுந்தர் சி கூறியிருக்கிறார். அதாவது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு இயக்குனர் அடிக்கடி சந்தானத்தை வந்து பார்த்துவிட்டு போவாராம். சுந்தர் சி சந்தானத்திடம் ஏன் அடிக்கடி வருகிறார் என கேட்டாராம். அதற்கு சந்தானம் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் கால்ஷீட் மட்டும் நடிக்கனும்.

ஆனால் என்னால் முடியவில்லை. நேரமே இல்லை. அதான் அலைஞ்சுட்டு போறாரு என சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நாள் சொன்னதும் பழிச்சிருச்சு என்றும் சந்தானம் கூறினார். ஒரு சமயம் இதே இயக்குனர் சுந்தர் சி மற்றும் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தாராம். ஒரு சமயம் காலையிலேயே சந்தானம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம்.

sundar
sundar

இதையும் படிங்க: மாமனாரும் மருமகனும் அடிக்கடி போனில் நலம் விசாரிப்பு! கூடிய சீக்கிரம் படத்திலயும் பாக்கப் போறீங்க

அலைய போறீங்க: மாலை நேரத்தில் சுந்தர் சி வர அப்போதும் சந்தானம் உட்கார்ந்திருந்தாராம். நாள் முழுக்க சந்தானத்தை உட்கார வைத்து காட்சிகளே எடுக்கவில்லையாம் இந்த இயக்குனர். இது தெரிந்த சுந்தர் சி அந்த இயக்குனரை ‘ஒரு நாள் அவர் கால்ஷிட் இல்லமா நீங்க அலைய போறீங்க’ என சத்தம் போட்டாராம். அன்று சொன்னதும் இப்போது பழித்துவிட்டது என இந்த பிளாஷ்பேக்கை கூறியிருக்கிறார் சந்தானம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.