இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்!.. அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லையாம்!..

Published on: June 5, 2024
---Advertisement---

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, தான்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. ரசிகர்களை திரையரங்கில் கவராத பல படங்கள் ஓடிடியில் வெளியான பின்னர் ஓடியுள்ளது.

புதிய படங்கள் நான்கு வாரத்துக்குள் ஓடிடியில் வந்து விடுவதால் ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு சென்று பார்ப்பதை நிறுத்திவிட்டதாக சிலர் கருத்துக்களைக் கூறி வந்தாலும், அரண்மனை 4 படத்தை அதிக மக்கள் பார்த்து 100 கோடி ரூபாய் வசூலை சாத்தியம் ஆக்கியதாக அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பூ அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ரீ ரிலீஸாகும் 3 படங்கள்!.. இப்படி பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கிறாரே தளபதி!.. பி ரெடி ஃபேன்ஸ்!..

அரண்மனை 4 படத்துக்கு பிறகு சுந்தர் சி கலகலப்பு 3 மற்றும் சங்கமித்ரா படங்களை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அரண்மனை 4 படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்காமல் பொறுமையாக ஒரு மாதத்தில் வீட்டிலேயே படுத்துக் கொண்டு பார்க்கலாம் என நினைத்த ஓடிடி ரசிகர்களுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக தற்போது அந்த படம் வரும் ஜூன் 21-ஆம் தேதி தான் வெளியாகும் என்கிற அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்துக்குள் ஓடிடியில் படம் வெளியாகவில்லை என்றால் அந்த படத்தையும் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அப்படியே குறைந்துவிடும் என்கின்றனர். அரண்மனை 4 படம் ஆறு வாரங்களுக்கு மேல் தாமதமாக வெளியானால் ஓடிடியில் அந்தப் படத்துக்கு கிராக்கி இருக்காது என்றும் இதுக்கு பருத்தி முட்டை குடோன்லயே இருக்கலாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நேத்து வரைக்கும் கோயில்ல உருண்ட நாட்டாமை! இன்னிக்கு எங்க இருக்காரு பாருங்க.. இதுவும் முக்கியம்ல

இன்னுமா அந்த படம் தியேட்டர்ல ஓடுது என்றும் படம் அவ்ளோ வொர்த் இல்லை பாஸ் என நெட்டிசன்கள் இப்பவே ஓடிடி ரசிகர்களை பிரைன் வாஷ் பண்ண ஆரம்பித்து விட்டனர். இன்னமும் செட்டில்மென்ட் நடக்கவில்லையா? சுந்தர் சி ஓவர் ரேட் கேட்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.