விஜயின் அந்தப் படம் எப்படி ஓடுச்சுனே தெரியல? இதுக்கு இவ்ளோ ரெஸ்பான்ஸா? சுந்தர் சி சொன்ன படம்

Actor Vijay: கோலிவுட்டில் விஜயின் மாஸ் எப்போதுமே ஒரு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதுவும் சமீப காலமாக அவர் ஆக்ஷன் சார்ந்த படங்களில் நடித்து மிகப்பெரிய அந்தஸ்தை எட்டி இருக்கிறார். வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் .எம்ஜிஆர், ரஜினி இவர்கள் வரிசையில் வசூல் மன்னனாக விஜய் கோலிவுட்டில் திகழ்ந்து வருகிறார்.

இப்போது அவரின் அடுத்த கட்ட பயணம் அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்காக தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்ததும் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து முழுவதுமாக அரசியலில் களம் இறங்கப் போகிறார். தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் அவருடைய 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர்டா… விஜய்க்கே ஆப்படித்த கமல்ஹாசன்… போடு மாஸ்…

இந்த இரண்டு படங்களை முடித்த கையோடு நேரடியாக அரசியலை நோக்கி அவரது பயணம் இருக்கும். இந்த நிலையில் விஜய்யின் ஒரு படத்தை பற்றி ஒரு பேட்டியில் சுந்தர் சி விமர்சித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சுந்தர் சி ஆரம்ப காலங்களில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்தபோது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படங்களை தியேட்டரில் போய் பார்ப்பது வழக்கமாம்.

அப்படி ஒரு விஜயின் படத்தை போய் பார்த்து இருக்கிறார் சுந்தர் சி. அந்த படத்தை பார்த்ததும் சுந்தர் சி இந்த படம் தேறவே தேறாது. ஓடவும் செய்யாது என நினைத்திருக்கிறார். ஆனால் முதல் ஷோவுக்குப் பிறகு அடுத்தடுத்த ஷோக்களில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி இருக்கிறது. அதனால் இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என மீண்டும் மீண்டும் சுந்தர் சி போய் பார்க்க கைதட்டல்களும் விசில் சத்தங்களும் அதிகமாகவே நாளுக்கு நாள் கேட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன.

இதையும் படிங்க: ஸ்டார் படத்தினை பார்க்கும் ரசிகர்களுக்கு… அந்த மூணை மட்டும்… இயக்குனர் இளன் வைத்த கோரிக்கை!…

அதன் பிறகு அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் மீதும் அந்த படத்தில் நடித்த விஜயின் மீதும் அவருக்கு அலாதி பிரியமே வந்துவிட்டதாம். அந்த படத்தின் பெயர் ரசிகன் என சுந்தர் சி அந்த பேட்டியில் கூறினார்.

 

Related Articles

Next Story