கார்த்திக்கை வச்சு படம் எடுக்கிறது கஷ்டம்… சுந்தர் சி மட்டும் எப்படி அவ்ளோ படம் எடுத்தாரு தெரியுமா?

Published on: April 2, 2024
karthisk
---Advertisement---

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கார்த்திக். பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் பெண் நடிகைகளின் கனவு நாயகனாகவும் அப்போது கார்த்திக் தான் இருந்து வந்தார். துரு துருவென இருக்கும் அவரது போக்கு, கிண்டலான பேச்சு என அனைவரையும் கவர்ந்தார் கார்த்திக். முதல் படமே பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படமாக அமைந்தது.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் மீசை இல்லாத ஒரு வாலிபனாக நடித்திருப்பார். முதல் படம் மாதிரியே இருக்காது. அந்தளவுக்கு ரொமான்ஸில் கலக்கியிருப்பார். முத்துராமன் மகன் என்பதையும் தாண்டி சினிமாவில் சாதிக்க ஆரம்பித்தார். அவருக்கு பலமே அவருடைய ஹுயூமர்தான். அதுவும் கவுண்டமணியுடனான அவரின் காம்போ ரசிக்கும் படியாக அமைந்தது.

இதையும் படிங்க: அந்த விஜய் சேதுபதி இப்ப இல்ல!… வேல ராமமூர்த்தி சொன்ன சூப்பர் மேட்டர்

கார்த்திக்கை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் படப்பிடிப்பிற்கு தாமதமாகத்தான் வருவார் என்ற புகார் எப்போதுமே இருக்கும். ஏனெனில் பெண்களுடன் ஊர் சுற்றுவது, படப்பிடிப்பிற்கு வந்தாலும் திடீரென காணாமல் போவது என கிட்டத்தட்ட ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்திருக்கிறார்.

இதனால் அவரை வைத்து படம் எடுப்பவர்களின் நிலைமை திண்டாட்டம்தான். ஆனால் சுந்தர் சி மட்டும் கார்த்திக்கை வைத்து ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். அதெப்படி அவரால் மட்டும் முடிந்தது என பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: திடீரென பாதித்த ரஜினிகாந்த் மனநிலை.. விமான நிலையத்தில் அடிதடி சண்டை!.. துணை நின்ற நம்பியார்…

கார்த்திக் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது நிஜம்தான். அவரை வைத்து சுந்தர் சி அதிக படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் நிஜம்தான். கார்த்திக் இப்படிப்பட்டவர்தான் என முன்பே சுந்தர் சிக்கு தெரியும். அதனால் காலையிலேயே படப்பிடிப்பிற்கு போனதுமே கார்த்திக் சம்பந்தம் இல்லாத காட்சிகளை கட கடவென எடுத்து முடித்துவிடுவாராம். கார்த்திக் வந்த பிறகு அவருடைய காம்போ காட்சிகளை எடுத்து முடித்துவிடுவாராம். இப்படித்தான் கார்த்திக் படத்தின் படப்பிடிப்பை சுந்தர் சி எடுத்திருக்கிறார் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.