இருந்தாலும் விஜய் இப்படி பண்ணக்கூடாது..! சுந்தர்.சியை வருத்தப்பட வைத்த தளபதி..
தமிழ் சினிமாவில் கமெரிஷியலான படங்களை நகைச்சுவை மூலம் கொடுத்து வெற்றிகண்ட் இயக்குனர்களில் சுந்தர்.சியும் ஒருவர். அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன், சுயம்வரம், போன்ற படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களம் இறங்கி நல்ல நல்ல படங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார்.
மேலும் தமிழி சினிமாவில் ரஜினி, அஜித், கமல், கார்த்திக் போன்ற முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சி நடிகர் விஜயை வைத்து இதுவரை எந்த படமும் இயக்கியதில்லையாம். அவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் விஜயைதான் அணுகினாராம்.
ஆனால் சிலபல காரணங்களால் விஜயால் நடிக்க முடியவில்லையாம். மேலும் விஜயை பார்க்கும் போதெல்லாம் இவர் கூட ஒரு படம் கூட பண்ணவில்லையே என்று பல நேரங்களில் வருத்தப்பட்டிருக்கேன் என்று கூறினார். மேலும் இனிமேலும் படம் பண்ணவும் முடியாது என்பதையும் கூறினார்.