எனது கேரியரில் அன்பே சிவம் கொடுத்த தண்டனையில் இருந்து கிரி படம் தான் என்னை காப்பாத்தியதாக நடிகர் சுந்தர்.சி தெரிவித்து இருக்கிறார்.
கமலின் நடிப்பில் வெளியான படம் அன்பே சிவம். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் 2003ல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.
கமலின் ரசிகர்களின் ஃபேவரிட் படம் என்ற லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்தது அன்பே சிவம். அதிலும், கமலின் நடிப்பு அனைவராலும் வெகு விமரிசையாக பாராட்டுக்களை பெற்றது. ஆனால் படம் வசூல் ரீதியாக ஃப்ளாப் தான். இதனால் சுந்தர்.சி தனது வீட்டைக்கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டாராம். நல்ல படம் பண்ணியதற்கு எனக்கு தண்டனையாகவே இது அமைந்தது.
அன்பே சிவம் படத்தால் என் சினிமா வாழ்க்கையே சறுக்கலை சந்தித்தது. அதற்காகவே கிரி படம் எடுத்தேன். முழுக்க முழுக்க கமர்ஷியலை சேர்த்து அந்த படத்தினை செய்ததால் என் சினிமா வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. 2004ல் வெளியான இப்படத்தில் அர்ஜூன், ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
குஷ்பூ தனது அவ்னி தயாரிப்பு நிறுவனத்தில் இந்த படத்தினை தயாரித்தார். தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும். அப்படி இல்லாத இயக்குனர்கள் கொஞ்ச நாளில் காணாமல் போய் விடுவார்கள். இப்போது இருக்கும் டெக்னாலஜியில் ஷூட்டிங் நாட்களை குறைத்து கொள்ளுங்கள். இது உங்களின் கேரியருக்கும் முக்கியம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…