சுந்தர்.சியை கோபப்படுத்திப் பார்த்த நடிகையின் அம்மா! ஆத்திரத்தில் அவர் சொன்னதுதான் ஹைலைட்

by Rohini |
sundar
X

sundar

தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. இவருடைய கரியரில் நிறைய படங்களை கொடுத்திருந்தாலும் அவருக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது உள்ளத்தை அள்ளித்தா மற்றும் அருணாச்சலம்.

sundar1

sundar1

அந்த இரு படங்களின் வெற்றி சுந்தர் சி யின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதுமட்டுமில்லாமல் அந்தப் படங்களைப் போல இன்றுவரை வேறு எந்த படங்களும் வெளி வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

இப்படியே இயக்குனராக இருந்த சுந்தர் சி திடீரென நடிகராக அடுத்த ரூபம் எடுத்தார். அவர் நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தலைநகரம், அரண்மனை போன்ற படங்களை குறிப்பிடலாம்.

sundar

sundar

சுந்தர் சி எப்பொழுதுமே கோபப்பட மாட்டாராம். எதையும் எந்த சூழ்நிலையையும் மிகவும் எளிதாக கையாளக்கூடியவராம். இப்படி கோபப்படாத சுந்தர் சியை ஒரு நடிகையின் அம்மா கோபப்படுத்தி பார்த்திருக்கிறார்.

அதாவது சுந்தர் சி இயக்கிய ஒரு படத்தில் அவருடைய நண்பரான இன்னொரு இயக்குனர் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். அவர் ஏற்கனவே பெரிய படங்களை எடுத்தவராம். இவருக்காக இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம்.

sundar3

sundar3

அந்த உதவி இயக்குனரை பற்றி தெரியாத அந்தப் படத்தின் ஹீரோயின் அம்மா அவரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டாராம். இதை பார்த்துக்கொண்ட சுந்தர் சி கோபத்தில் அந்த நடிகையின் அம்மாவை கெட் அவுட் என்று ஷூட்டிங்கில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம்.

இதையும் படிங்க : தேவர் மகன் பார்த்துவிட்டு கவுண்டமணி அடித்த கமெண்ட்!.. அதிர்ந்து போன சிவாஜி…

இதைப் பற்றி சுந்தர் சி ஒரு பேட்டியில் இதுவரை நான் அந்த மாதிரி நடந்து கொண்டதே இல்லை என்றும் அதுதான் முதல் தடவை என்றும் அதுவும் பெரிய படங்களை எடுத்த இயக்குனரை பார்த்து அந்த அம்மா அப்படி சொன்னதும் கோபத்தில் கத்தி விட்டேன் என்றும் கூறினார்.

Next Story