சுந்தர்.சி சொன்னத கேட்டு அசந்து போன கார்த்தி!. விரைவில் புது படம் ஸ்டார்ட்..

Actor karthi: தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக படமெடுக்கும் இயக்குனர் சுந்தர்.சிதான். தயாரிப்பாளரிடம் எவ்வளவு பட்ஜெட் என சொன்னாரே அதை விட குறைவாகவே படத்தை முடித்துவிடுவார். அதேபோல், எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என சொன்னாரோ அதை விட குறைவான நாட்களில் படத்தை முடித்துவிடுவார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி.. சில மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவார். அதனால்தான் அவரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என சொல்வார்கள்.
25 வருடங்களாக கோலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வரும் இயக்குனர் இவர். இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் இப்போதும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. சுந்தர்.சி. படம் என்றாலே காமெடி கலந்த காதல் கதை இருக்கும். குடும்பத்தோடு போய் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் இவர்.
ரஜினி, கமல், அஜித், கார்த்திக், விஷால் என பலரை வைத்தும் படம் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் நடிக்காத ஒரே நடிகர் விஜய் மட்டுமே. விஜயை வைத்து படமெடுக்க சுந்தர்.சி சிலமுறை முயன்றும் அது நடக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் சுந்தர்.சி. நடிக்கவும் துவங்கினார். 10க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அதிலும், இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் 4 பாகங்களும் அசத்தலான வெற்றியை பெற்றது. அடுத்து அரண்மனை 5 எடுக்க திட்டமிட்டிருக்கிறார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில், அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அதோடு, வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி நடித்துள்ள கேங்கர்ஸ் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியிடம் சுந்தர்.சி ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்திருந்தாலும் கார்த்தியின் கையில் நிறைய படங்கள் இருப்பதால் கையை பிசைந்திருக்கிறார். ‘எனக்கு 3 மாதங்கள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள். படத்தை முடித்துவிடுகிறேன்’ என சுந்தர்.சி சொல்ல கார்த்தி உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
இந்த வருடம் டிசம்பர் மாதம் துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிந்துவிடும் என்கிறார்கள். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்த்தி வா வாத்தியாரே என்கிற படத்தில் நடித்துமுடித்துவிட்டு இப்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கைதி 2 படம் இருக்கிறது. இதற்கிடையில்தான் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.