Categories: latest news

சுந்தர் சி அடுத்த இயக்கப்போவது அரண்மனை 4 இல்லையாம்?!… அடடே இந்த சீரியஸுக்கு தாவிட்டாரே!…

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் மற்ற மொழி படங்கள் சக்க போடு போட்டு வந்தது. அப்போது தமிழ் சினிமாவை சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படம் தான் தூக்கி நிறுத்தியது.

சுந்தர் சி இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான அரண்மனை 3 திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாததால் அரண்மனை 4 திரைப்படத்தை மிகவும் கவனமாக இயக்கியிருந்தார் இயக்குனர் சுந்தர் சி. இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியால் இயக்குனர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

இதையும் படிங்க: மனோஜின் திருட்டுத்தனம்… பாண்டியனால் கடுப்பாகும் மீனா… பாக்கியாவிடம் சண்டைக்கு நிற்கும் செழியன்

இதற்கு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கப் போவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் வைரலாகி வந்த நிலையில் அதனை வதந்தி என்று சுந்தர் சி தரப்பினர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த திரைப்படம் கலகலப்பு.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், விமல், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்ததால் மீண்டும் அரண்மனை பாகங்களை இயக்குவதற்கு தொடங்கியிருந்தார் சுந்தர் சி. இந்நிலையில் மீண்டும் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த பதிவினை இயக்குனர் சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவ்னி சினிமாஸும், பொழுதுபோக்கின் அரசனான சுந்தர்சியும், தொழிலதிபர் கண்ணன் ரவியோடு இணைந்து கலகலப்பு 3 உருவாக உள்ளது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: துணை முதல்வரான பிறகு உதயநிதிக்கு டெஸ்ட் வச்ச ரோபோ சங்கர்.. அங்கிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?

இதில் கண்ணன் ரவி என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். தற்போது துபாயில் தொழிலதிபராக இருந்து வருகின்றார். இவர் ஏற்கனவே சாந்தனுவின் ராவணக் கூட்டம் என்கின்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் கண்ணன் ரவியுடன் இணைந்து சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே இயக்குனர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகின்றது. ஆக மொத்தம் எந்த திரைப்படத்தை முதலில் அவர் இயக்கப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago