சுந்தர் சி-யை ஏமாற்றிய மணிவண்ணன்?.. ஆனால் உண்மை காரணம் என்ன தெரியுமா?

Published on: March 22, 2023
Sundar C and Manivannan
---Advertisement---

தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களுள் மிக முக்கியமான இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி. இவர் “முறைமாமன்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். அதனை தொடர்ந்து “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி”, “உனக்காக எல்லாம் உனக்காக” போன்ற பல கலகலப்பான திரைப்படங்களை இயக்கியிருந்தார். நகைச்சுவை பாணியில் திரைக்கதை அமைப்பதில் மிகவும் கைத்தேர்ந்தவராக திகழ்ந்து வருபவர் சுந்தர் சி.

Sundar C
Sundar C

நடிகராக அவதாரம் எடுத்த சுந்தர் சி

சுந்தர் சி ஒரு காலகட்டத்திற்கு பிறகு நடிகராக அவதாரம் எடுத்தார். தற்போது “அரண்மனை 4” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அதனை இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி ஒரு பேட்டியின்போது, தான் “அமைதிப்படை” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதாக கூறியிருந்தார். ஆனால் அவரின் பெயர் அந்த படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெறவில்லை.

Amaidhi Padai
Amaidhi Padai

டைட்டில் கார்டில் இல்லாத சுந்தர் சி பெயர்

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “இயக்குனர் சுந்தர் சி, அமைதிப்படை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படத்தின் டைட்டில் கார்டில் அந்த பெயரே இல்லை. அப்படி என்றால் அவர் சொன்னது பொய்யா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

Chitra Lakshmanan
Chitra Lakshmanan

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “அமைதிப்படை திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே சுந்தர் சி இயக்குனராக ஆகிவிட்டார். அமைதிப்படை திரைப்படத்தில் சுந்தர் சியால் சிறிது காலம்தான் பணியாற்றமுடிந்தது. அதன் காரணமாகத்தான் அவரது பெயர் டைட்டிடிலில் இடம்பெறவில்லை” என கூறியிருந்தார். இவ்வாறு உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்… எல்லாம் அந்த ஒரு படத்தால் வந்ததுதான்!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.