சுந்தர்.சி-ஐ பார்த்தவுடன் காரை நிறுத்திய நாகேஷ்… இயக்குனரின் மனதில் தங்கிப்போன ஒரு சோக சம்பவம்… இப்படி ஆகிடுச்சே!

Nagesh
தமிழ் சினிமாவின் முன்னணி கம்மெர்சியல் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சுந்தர்.சி. இவர் தற்போது “அரண்மனை-4” திரைப்படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார். அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு டிராப் ஆன பிரம்மாண்ட படைப்பான “சங்கமித்ரா” திரைப்படத்தை மீண்டும் உருவாக்கப்போவதாக சில தகவல்களும் வெளிவருகின்றன. இந்த நிலையில் தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷுடன், சுந்தர்.சிக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

Sundar C
சுந்தர்.சி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் ஒரு நாள், ஒரு டப்பிங் ஸ்டூடியோவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு கார் சென்றிருக்கிறது. அப்போது திடீரென அந்த கார் நின்றிருக்கிறது.
சுந்தர்.சி அந்த காரையே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த காரில் இருந்து ஒருவர் வெளியே இறங்கி, நேராக சுந்தர்.சியை நோக்கி நடந்து வந்திருக்கிறார். அவர் நெருங்கி வரும்போதுதான் தெரிந்திருக்கிறது அவர் நாகேஷ் என்று. உடனே சுந்தர்.சி ஓடிச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினாராம்.

Nagesh
“என் பெயர் நாகேஷ், நிறையா படங்களில் நடித்திருக்கிறேன். இப்பவும் சினிமாவுலதான் நடிச்சிட்டு இருக்கேன். ஓரளவு நல்லா நடிப்பேன். என்னை கூட உங்க படத்துல பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று சுந்தர்.சியிடம் கிண்டலோடு கூறியிருக்கிறார். அவர் அப்படி சொன்னவுடன் சுந்தர்.சிக்கு வியர்த்துவிட்டதாம்.
தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞனான நாகேஷை நாம் ஒரு திரைப்படத்தில் கூட பயன்படுத்தவில்லையே என அப்போதுதான் நினைத்து வருந்தினாராம் சுந்தர்.சி. தனது அடுத்த படத்தில் நிச்சயமாக நாகேஷை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் துர்திஷ்டவசமாக சுந்தர்.சியை சந்தித்த இரண்டு மாதங்களிலேயே நாகேஷ் உயிரிழந்தார். தனது திரைப்படத்தில் கடைசி வரை நாகேஷை நடிக்க வைக்காமல் இருந்துவிட்டோமே என்ற சோகம், சுந்தர்.சியின் மனதில் இப்போதும் இருக்கிறதாம்.
இதையும் படிங்க: விணு சக்ரவர்த்தி வாழ்க்கையையே மாற்றிய அந்த ரயில் பயணம்… ஒரு சிகரெட்தான் காரணமே!…