Categories: Cinema News latest news

நாங்க பண்ற ரொமான்ஸ் பார்த்து எங்க பசங்க…. குஷ்பு மீது இப்படி ஒரு காதலா சுந்தர் சி’க்கு…?

புஷ் புஷ் நடிகையான நடிகை குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். குறிப்பாக 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்த குஷ்பு 90களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

இவர் தமிழ் மட்டும் அல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். இதனிடையே நடிகர் பிரபுவை காதலித்தார். ஆனால், அந்த காதலுக்கு சிவாஜி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டது.

அதன் பின்னர் இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக ஆகிவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சியிடம், 20 வருஷத்துக்கு முன்னாடி போயி அப்போ காதலித்த மாதிரி குஷ்புவை இப்போ நேசிக்கிறீங்களா என கேட்டதற்கு? நான் ஏங்க 20 வருஷம் முன்னாடி போகணும். நான் இப்போவும் என் பொண்டாட்டியை அப்படியே தான் காதலிக்கிறேன். நாங்க பண்ற ரொமான்ஸ் பார்த்து எங்க பசங்க கிண்டல் பண்ணுவாங்க என கூறினார்.

Published by
பிரஜன்