சினிமாவை விட்டு விலக நினைத்தாரா அஜித்? இயக்குனர் கூறிய பகீர் தகவல்....

by adminram |
ajith
X

சினிமாவில் ஒரு சில நடிகரை மட்டுமே அனைத்து ரசிகர்களும் விரும்புவார்கள். அப்படி அனைத்து ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான். இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட சிறந்த மனிதர் என கூறுவதுதான் சரியாக இருக்கும்.

நடிகர் அஜித்தின் திரை வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். யாருடைய ஆதரவும், பின்புலமும் இல்லாமல் தன் செந்த முயற்சியால் திரையுலகில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ள நடிகர் அஜித் பல கஷ்டங்களை தாண்டியே இந்த உயரத்தை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sundar c

sundar c

இப்படி கஷ்டப்பட்டு முன்னேறிய அஜித் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்தார் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். அஜித் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார்.

சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, "அந்த சமயத்தில் அஜித் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறினார். ஆனால் அதன்பின் எப்படி அவர் முடிவை மாற்றினார் என்பது தெரியவில்லை. தற்போது தனது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இந்த உயரத்தில் அவர் இருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது" என கூறியுள்ளார்.

அஜித் ஒரு பந்தய வீரர் என்பதும், அவருக்கு விபத்து நேர்ந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த சமயத்தில் தான் அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். ஆனால் எப்படியே தனது முடிவை மாற்றி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Next Story