சும்மா இருந்தவர கூப்பிட்டு ஹிட் கொடுத்தா? என்கிட்டயே ஆட்டிட்யூட் காட்டுனாரு.. சுந்தர் சி சொன்ன ஹீரோ

by Rohini |   ( Updated:2025-04-26 03:01:00  )
sundarc (1)
X

sundarc (1)

Sundar C:சமீபத்தில் சுந்தர் சி இயக்கி நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி வடிவேலு காம்போவில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இதுவே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படத்தில் வடிவேலுவின் காமெடி மீண்டும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் பெண் வேடமிட்டும் வடிவேலு நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் வெளிப்படுத்திய அந்த முக பாவனை நகைச்சுவையான வசனங்கள் ஆகியவை இந்த படத்தில் இருப்பதால் முன்பு பார்த்த வடிவேலுவை இந்த படத்தில் பார்த்து விட்டோம் என ரசிகர்களும் உணர்ச்சி பொங்க பேசியதை நாம் பார்க்க முடிந்தது .

சுந்தர் சி யின் சமீப கால படங்கள் தொடர் வெற்றியை கொடுத்து வருகின்றன. அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு இயக்குனராக மாறி வருகிறார் சுந்தர்சி. முறைமாமன் படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி பெரும்பாலும் அவருடைய படங்களில் ஹியூமருக்கு பஞ்சம் இருக்காது. சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் என நக்கல் மன்னன்களை வைத்து படங்களை எடுத்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் சுந்தர் சி. அதுமட்டுமல்ல அஜித், ரஜினி, கமல் என பெரிய பெரிய நடிகர்களுக்கும் படம் பண்ணியிருக்கிறார்.

மணிரத்தினம் சங்கர் இவர்களைப் போல் ஒரு மாஸ் எலிமெண்ட் அவருடைய படத்தில் இல்லை என்றாலும் அவருக்கு என ஒரு தனி ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு தன் படங்களின் மூலம் ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்ஸையும் கலகலப்பாக வைத்து வருகிறார் சுந்தர் சி .இந்த நிலையில் ஒரு நடிகரைப் பற்றி சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியது வைரலாகி வருகின்றது .ஒரு ஹீரோவை வைத்து ஒரு படத்தை எடுத்தாராம் சுந்தர் சி. அப்போது அந்த ஹீரோவுக்கு மார்க்கெட் இல்லையாம். இருந்தாலும் அவரை வைத்து ஒரு படம் எடுத்தேன்.

அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது. மீண்டும் அதே ஹீரோவுடன் இணைந்தேன். ஆனால் அப்போது அவருக்கு மார்க்கெட் யாரும் எதிர்பாராத அளவில் இருந்தது. ஆனால் இரண்டாவது முறை அவருடன் இணையும் பொழுது ஒவ்வொரு சீனுக்கும் 100 கேள்விகளை கேட்டு என்னை டார்ச்சர் செய்துவிட்டார். ஓவர் ஆட்டிட்யூட் காட்டினார். அதுவே என்னை மிக பெரிய அளவில் களைப்படைய செய்தது.

ஏன்டா இந்த படத்தை எடுத்தோம் என்ற அளவுக்கு யோசிக்க வைத்தது .அந்த நேரத்தில் தான் என்னுடைய பேனரில் சுராஜ் ஒரு படத்தை எடுக்க முன் வந்தார். ஆனால் அந்த படத்திற்கு வேறொரு ஹீரோ தான் நடிக்க இருந்தது .எதிர்பாராத விதமாக நான் அந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி விட்டேன். அதுதான் தலைநகரம். அதிலிருந்து 20 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறேன் என சுந்தர் சி அந்த ஹீரோவின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தை அந்த பேட்டியில் கூறினார்.

Next Story