கேப்டனுக்கு பிறகு அந்த விஷயத்துல விஜய்தான்.. இதனாலதான் அந்த படம் மிஸ் ஆச்சா?

kanth
Vijay: ஒவ்வொரு மனிதரும் குணங்களில் பழக்கவழக்கங்களில் வெவ்வேறு மாதிரியாகத்தான் இருப்பார்கள். ஐந்து விரல்களும் ஒன்று போலவா இருக்கின்றன. அப்படித்தான் மனித வாழ்க்கையும். அந்த வகையில் நமக்கு பிடித்த ஒருவரை போல் இன்னொருவர் இருக்கிறார் என்றால் நம்மை அறியாமலேயே அவர் மீதும் நாம் அன்பு செலுத்திவிடுவோம். உதாரணமாக எம்ஜிஆர் எப்பேற்பட்ட புகழுக்கு சொந்தக்காரர்.
அதற்கு ஒரே காரணம். ஏழைகளிடத்தில் வித்தியாசமின்றி பழகுவார். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாராது அனைவரும் சமம் என்று நினைப்பார். எதார்த்தமாக பழககூடியவர். அப்படி யாரேனும் வரமாட்டார்களா என்று ஏங்கியதும் உண்டு. ஆனால் அப்படி வந்தவர்தான் விஜயகாந்த். அதனாலேயே கருப்பு எம்ஜிஆர் என்று விஜயகாந்த் அழைக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவரை போல் இன்று வரை யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினி உட்பட காரில் இருந்தவாறே டாட்டா காட்டி செல்கிறார். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் விஜயகாந்த் போல் விஜய் என சுந்தர் சி கூறினார். சினிமாவில் டைட்டில் கார்டு முதல் எண்ட் கார்டு வரை கதை கேட்க கூடிய ஒரே நடிகர் விஜயகாந்த். அவருக்கு பிறகு அப்படி முழுவதுமாக கதை கேட்கக் கூடிய நடிகர் யாரென்றால் விஜய்தான் என சுந்தர் சி கூறினார். ஆனால் சுந்தர் சிக்கு கதை சொல்ல வராதாம்.
விஜய் திருமணத்திற்கு முன்பு விஜயை வைத்து எத்தனையோ முறை படம் எடுக்க சுந்தர் சிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு முறை சுந்தர் சிக்கு ஒன் லைன் ஐடியா வர உடனே விஜயை பார்த்து அந்த ஒன் லைனை சொல்லியிருக்கிறார். நான் அப்பாவிடம் சொல்கிறேன். அப்பா உங்களிடம் பேசுவார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம் விஜய். பிறகு மாலை நேரத்தில் சந்திரசேகர் சுந்தர் சியை பார்த்து ‘விஜய்க்கு ஒரு பழக்கத்தை பழக்கிவிட்டேன். அவன் முழுவதுமாக கதை கேட்க கூடியவன். அதனால் நீங்கள் சொன்ன கதை அவனுக்கு புரியவில்லையாம்’ என சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும் உங்களுடன் படம் பண்ண விருப்பப்படுகிறான் என சொல்லி அந்த வருட இறுதியில் கால்ஷீட் கொடுத்து அனுப்பிவிட்டாராம் சந்திரசேகர். அப்புறம் ஒரு பாடல் காட்சிக்காக ஏவிஎம்மில் இருந்த சுந்தர் சியை பார்க்க அஜித் வெளியில் நின்று கொண்டிருந்தாராம். சுந்தர் சி வந்ததும் ‘உங்களுடன் படம் பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என சொல்லியிருக்கிறார். உடனே சுந்தர் சி தன்னை முதன் முதலில் தேடி வந்த ஹீரோ அஜித். அதனால் உடனே அஜித்துக்காக பண்ணிய படம்தான் உன்னைத்தேடி என சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறினார்.