சங்கமித்ரா பட அப்டேட் கொடுத்த சுந்தர்.சி… அங்கையே பல்ப் வாங்கியாச்சு… இது வேண்டாம்.. நழுவிய ஹீரோ…

by Akhilan |
சங்கமித்ரா பட அப்டேட் கொடுத்த சுந்தர்.சி… அங்கையே பல்ப் வாங்கியாச்சு… இது வேண்டாம்.. நழுவிய ஹீரோ…
X

Sangamithra: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான சங்கமித்ரா படத்தின் நிலைமை குறித்து எந்த சேதியும் தெரியாமல் இருந்த நிலையில், அப்படத்தின் அப்டேட்டை ஒருவழியாக இயக்குனர் சுந்தர்.சி வெளியிட்டு இருக்கிறார்.

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இதனால் தொடர்ச்சியாக அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அரண்மணை, கலகலப்பு, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர் என சுந்தர்.சியின் சினிமா லிஸ்ட் பெரிய அளவிலான ஹிட்டாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

ஒருகட்டத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக நடித்து வருகிறார் சுந்தர்.சி. இருந்தாலும் அவரின் கனவுப்படமான சங்கமித்ரா தான் இன்னமும் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. 70வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானது. ஆனால் அதற்கடுத்த இந்த படத்தின் வேலைகள் எதுவும் நடக்கவில்லை.

கடந்த வருடம் இந்த படத்தின் பிரம்மாண்ட செட் பணிகள் நடப்பதாக சுந்தர்.சி ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார். தற்போது ஒருவழியாக அப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை சுந்தர்.சி கூறியிருக்கிறார். இந்த வருடத்துக்குள் படம் தொடங்கிவிடும் என நம்புகிறேன். நான், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் எல்லாரும் இப்படத்துக்காக உழைத்து இருக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க: வெறும் செட் போட்டு பிரம்மாண்டம்னு பேர் எடுத்தவர் இல்ல ஷங்கர்! அவரை பற்றி தெரியாத ஒரு விஷயம்

ஏற்கனவே லைகா இப்படத்தினை தயாரிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆர்யா மற்றும் பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது ஜெயம் ரவி தானாம். ஆனால் அவருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவமே இந்த விலகலுக்கு காரணமாம். அப்படத்தில் தனக்கு பெரிய அளவில் பங்கு இல்லாமல் போனதும் இந்த படத்திற்கு மறுத்து தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

Next Story