ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே!.. குஷ்பு வந்தவுடனே சந்திரமுகியா மாறிய சுந்தர். சி?
அரண்மனை 4 படத்திற்கான புரமோஷன் பணிகள் களைகட்டி வருகின்றன. படத்தில் தங்கையாக தமன்னா நடித்தாலும், அவருடனும் ஜோடியாக நின்று போஸ் கொடுக்க அரண்மனை 4 நிகழ்ச்சியில் சுந்தர். சி ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு நடிகை குஷ்பு ஆப்பு வைத்தது போல பண்ண வேலையால் சுந்தர். சி மேடையிலேயே அப்செட் ஆகி விட்டதாக வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
சுந்தர். சி படங்களை அவருக்காக யாருமே பார்க்க மாட்டாங்க என்பது அவருக்கே நல்லா தெரியும். அதனால் தான் லட்டு போல ஹீரோயின்களையும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சியையும் கொடுத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து வருகிறார். அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா படங்களில் ரம்பாவில் தொடங்கி அன்பே சிவம் படத்தில் கிரண் என அந்த காலத்திலேயே கவர்ச்சி நடிகைகளை படங்களில் புக் செய்து வந்த சுந்தர். சி அதன் பின்னர் ஹன்சிகாவை வைத்து பல படங்களை உருட்டினார்.
இதையும் படிங்க: கேப்டனை நடிக்க வைக்க நடிகை பட்ட பாடு! கடைசியில் சண்டையில் முடிந்த சம்பவம்..
இந்நிலையில், தற்போது அரண்மனை 3 படத்தில் இருந்து ராஷி கன்னா சிக்கியுள்ள நிலையில், அரண்மனை 4 படத்தில் தமன்னா வந்து மாட்டிக் கொண்டார். ஒரு பக்கம் தமன்னா, இன்னொரு பக்கம் ராஷி கன்னா நிற்க ஜாலியாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் சுந்தர். சி.
புருஷன் ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருந்தா மனைவிமாருங்களுக்கு பிடிக்காதே, உடனடியாக சுந்தர். சிக்கு அருகே வந்து நின்று குஷ்பு மறைத்துக் கொண்டிருக்க அவருடைய முகமே அப்படியே வாடிப்போகும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அட்லியை மொய்க்கும் 3 ஹீரோயின்கள்!.. ஹீரோ பக்கம் நைஸா காயை நகர்த்திய கில்லாடி இயக்குநர்!..
மேடையிலேயே இப்படி குறுக்கா வந்து மறைக்கும் குஷ்பு வீட்டுக்குப் போன பின்னர் சுந்தர். சிக்கு என்னம்மா கும்மாங்குத்து குத்தியிருப்பார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா நடித்தும் கொஞ்சம் கூட அந்த படத்தை பார்க்கவே முடியவில்லை.
அரண்மனை 4 படத்தில் சுந்தர். சி தான் ஹீரோ என்கிற இடத்திலேயே ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போவார்களா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
சுசி மாமா Be Like:
இவ யாரு குறுக்க தர்த்திரியம் புடிச்சவ நடுவுல 🤬 அதான் 365 நாளும் உன்கூட தான இருக்கேன் ஒரு 5 நிமிஷம் நிம்மதியா இருக்க கூடாதே 🥲பாவம் அவரு மூஞ்சியே சுருங்கி போச்சு காஞ்ச வத்தல் மாதிரி 🤧 pic.twitter.com/tC7jvgqP30
— நாகரீக கோமாளி 🤡 (INDIA ka parivar) (@TrashManMe) April 1, 2024