Connect with us

Cinema News

சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..

அரண்மனை 3 திரைப்படம் ஆர்யா, ராஷி கனனா நடிப்பில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தை முழு நம்பிக்கையுடன் எடுத்து வெற்றி பெற்றுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் தமன்னாவின் கணவராக சந்தோஷ் பிரதாப் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் தான் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க சுந்தர் சி திட்டமிட்டு இருந்தாரா? அதனால் தான் மக்கள் செல்வன் படத்தில் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இல்லையே என மறுத்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருக்கு படத்தில் பெரிய வேலை ஏதும் இல்லை. இயக்கத்தில் அதிக கவனத்தை செலுத்தி புரொடக்‌ஷன் வேல்யூ கொண்ட படமாக அரண்மனை 4 படத்தை கொடுத்துள்ளார். அதுதான் இந்த படத்தின் வெற்றிக்கான காரணம் என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஓவர் வீராப்பால் தலைல துண்ட போட்டதுதான் மிச்சம்! விஜய்க்கு எதிரா சுந்தர் சி எடுத்த ரிஸ்க்

தமன்னாவின் நடிப்பு மற்றும் அந்த பாக் பேயின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமன்னாவின் மகனாக நடித்துள்ள சிறுவன் முதல் பாதியில் நன்றாக நடித்து குழந்தைகளை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.

பேய் வரும் அமானுஷ்யமான காட்சிகளை எந்தவொரு சிஜி சொதப்பலும் இல்லாமல் நேர்த்தியாக சுந்தர் சி படம் பிடித்திருப்பது மற்றும் படத்தின் லொகேஷன், கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் அம்மன் சிலை என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது.

இதையும் படிங்க: ரஜினியின் சோகப்பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? சரியான நேரத்தில் சமாளித்து அசத்திய வைரமுத்து

படத்தின் தொடக்கத்திலேயே பாக் பேயை கிளப்பி விட அது செய்யும் அட்டகாசங்களை காட்டி சுந்தர். சி தொடங்கிய இடத்திலேயே சிக்சர் அடித்து விட்டார். முதல் பாதி விறு விறுப்பாக சென்ற நிலையில், இரண்டா பாதியில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனும் சென்டிமெண்ட் காட்சிகளுடன் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படம் போல வந்து ரசிகர்களை கவர்கிறது.

முதல் நாள் வசூல் 4.65 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2ம் நாள் வசூல் 6.65 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், சன் டே ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் அரண்மனை 4 படத்தைப் பார்க்க தியேட்டரில் குவிந்த நிலையில் 7.50 கோடி ரூபாய் வசூலை நேற்று மட்டும் அந்த படம் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 18.80 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 திரைப்படம் பெற்று இருப்பதாகவும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான புதிய படங்களில் முதல் வெற்றி படமாக அரண்மனை 4 மாறி உள்ளதாக கூறுகின்றனர். 50 முதல் அதிகபட்சமாக 75 கோடி வசூல் ஈட்டும் இந்த படம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top