உங்களை கெஞ்சி கேக்குறேன்…அத பண்ணாதீங்க!.. விமர்சகர்களிடம் கெஞ்சும் இயக்குனர் சுந்தர் சி….

Published on: October 12, 2021
சுந்தர்.சி
---Advertisement---

தமிழ் சினிமாவில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கதைக்கென மெனக்கெடாமல் படம் இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருபவர் சுந்தர் சி. இவரது திரைப்படங்களில் பெரிதாக கதையும் இருக்காது. மக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்கிற கருத்தும் இருக்காது. காதல், காமெடி, குடும்பம், நண்பர்கள் என ஜாலியாக படம் எடுக்கும் இயக்குனர்களில் இவர் முக்கியமானவர்.

முதன் முதலாக இவர் இயக்கிய பேய் படம்தான் அரண்மனை. இப்படத்தில் ஆண்ட்ரியா, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், வினய், சரவணன்,கோவை சரளா உள்ளிட பலரும் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே, மீண்டும் அரண்மனை 2 எடுத்தார்.

aranmanai

அப்படமும் வெற்றி. தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சி., ஆர்யா, யோகிபாபு, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுந்தர் சி. ‘என் படங்களை நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். என் வேலையை குப்பை என கூட கூறுங்கள். நான் அதற்கு பழகிவிட்டேன். ஆனால், படத்தின் முழுக்கதையையும் மக்களிடம் கூறாதீர்கள்.

aranmanai

குறிப்பாக படத்தின் முக்கிய அம்சங்களை விமர்சனம் என்கிற பெயரில் சொல்லி விடாதீர்கள்.நான் மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு சாதாரன இயக்குனர். என் படத்தில் கருத்து சொல்ல மாட்டேன். மக்களை மகிழ்விக்கும் படியான திரைக்கதைகளை அமைக்கிறேன். எனவே, அந்த ஐடியாக்களை நீங்கள் விமர்சனத்தில் கூறாதீர்கள்’ என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment