தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த கே.பி.சுந்தராம்பாள், 1908 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே நன்றாக பாடக்கூடிய திறமை பெற்ற சுந்தராம்பாள், வறுமையின் காரணமாக சிறு வயதிலேயே ரயிலில் பாடி காசு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சுந்தராம்பாளின் குரல் வளத்தை பார்த்த நாடகக்காரர் ஒருவர், அவரை நாடகத்தில் நடிக்க வைப்பதற்கும் பாட வைப்பதற்கும் அழைத்துச் சென்றார். அதன் பின் கே.பி.சுந்தரம்பாளின் வாழ்க்கையே மாறிப்போனது.
நாடகத்துறையில் புகழ்பெற்ற பாடகியாகவும் நடிகையாகவும் வளர்ந்த சுந்தராம்பாள், அக்காலகட்டத்தில் மிகவும் வீரியமாக இருந்த இந்திய சுதந்திர போரட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் அக்காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடகராக திகழ்ந்த கிட்டப்பாவை சுந்தராம்பாள் திருமணம் செய்துகொண்டார்.
இவ்வாறு புகழ்பெற்ற நாடக கலைஞராக திகழ்ந்த கே.பி.சுந்தராம்பாள் 1935 ஆம் ஆண்டு “நந்தனார்” திரைப்படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்றிருந்த பல பாடல்களையும் பாடினார். அதன் பின் “மணிமேகலை”, “அவ்வையார்”, “பூம்புகார்”, “திருவிளையாடல்” ஆகிய பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் சுந்தராம்பாள்.
மேலும் அந்த காலகட்டத்திலேயே 1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாகவும் திகழ்ந்தார். அந்த அளவுக்கு மிகப்புகழ் பெற்ற நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்தார்.
இதையும் படிங்க: சத்யராஜ் வில்லனாக கலக்கிய 6 திரைப்படங்கள்.. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்குறீங்களே!…
இந்த நிலையில் 1940 ஆம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள் நடித்த “மணிமேகலை” திரைப்படத்தை தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட 13 வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லையாம். இது குறித்து ஒரு பத்திரிக்கை நிருபர் அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
“மணிமேகலை திரைப்படத்தை தொடர்ந்து சுப்பையா செட்டியார் என்ற தயாரிப்பாளர், தான் உருவாக்குவதாக இருந்த வள்ளித் திருமணம் என்ற திரைப்படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தார். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை அவர் கொடுக்க முன் வரவில்லை. ஆதலால் அதில் நடிக்கவில்லை. அவ்வாறுதான் இவ்வளவு பெரிய இடைவெளி விழுந்தது” என கூறியிருந்தாராம்.
நயன்தாராவுக்கு பணத்தால்…
Dhanush: தற்போது…
நடிகை நயன்தாரா…
வேட்டையன் திரைப்படத்துடன்…
Surya Jothika:…