Biggboss Tamil 8: வீட்டை விட்டு வெளியேறிய 'சுனிதா'வின் முதல் போஸ்ட்... செம மெசேஜ்!

by சிவா |
sunitha
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் போட்டியாளர்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளாக மாறி லூட்டியடித்து வருகின்றனர். இதிலாவது கண்டெண்ட் தேறுமா? இல்லை வழக்கம்போல சொதப்பி விடுவார்களா? என பிக்பாஸ் குத்தவைத்து காத்திருக்கிறார்.

இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். புதிதாக 6 வைல்டு கார்டு என்ட்ரிகளை வீட்டுக்குள் இறக்கி விட்டுள்ளனர். ஆனால் பெரிய பரபரப்பு எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு போட்டியாளர்கள் விஜய் சேதுபதி பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம்பிடிப்பதும் ஒரு காரணம்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!

இந்தநிலையில் வீட்டில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த விஜய் டிவி செல்லப்பிள்ளை சுனிதா கோகோய் வெளியேறியதற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அதில், '35 நாட்கள் வீட்டில் இருந்து இருக்கிறேன். எண்ணற்ற நினைவுகள் கிடைத்துள்ளன. வாழ்நாள் முழுவதும் இதற்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். என்று தெரிவித்து தன்னுடைய பிக்பாஸ் பயணத்தை சிறிய வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

sunitha

sunitha

இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் நன்றாக ஆடினீர்கள். மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று ஒரு கலக்கு கலக்குங்கள் என அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சுனிதா தன்னுடைய கவிதைகளால் பிக்பாஸ் வீட்டின் என்டர்டெயினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story