’சுனிதாவை கல்யாணம் பண்ணிப்பேன்’ - ஓப்பனா பேசிய சார்பட்டா நடிகர்.....!

by Rohini |
sunitha_main_cine
X

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்தோஷ் பிரதாப். பார்த்திபன் இயக்கத்தில் நடித்த ‘கதை திரைக்கதை வசனம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ். சினிமாவிற்குள் வருவதற்கு முன் நிறைய அட்வென்சர்ஸ் டாஸ்க் நடக்கிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

sunitha1_cine

அதன் மூலம் தான் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் நடித்த சார்பட்டா பரம்பரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆர்யாவிற்கு போட்டியாக களத்தில் குதிப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த சந்தோஷ் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

sunitha2_cine

இவரின் சமையலை வெங்கட் பட், தாமு ஆகியோர் மிகவும் பாராட்டினர். வந்ததில் இருந்தே நன்றாக சமைத்துக் கொண்டிருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா இவர் மேல் ஒரு கிரஷுடனயே சுற்றிக் கொண்டிருந்தார். அது காமெடிக்காக இருந்தாலுமே அவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் பார்க்கும் போது அற்புதமாக இருந்தது.

sunitha3_cine

திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் புதிய படவாய்ப்புகள் தேடி வந்தது. திரிஷாவுடனும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார் என்ற தகவலும் பரவியது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் "உங்களை ரோஷினி ஹரிப்பிரியன் மற்றும் சுனிதா இவர்களில் ஒருவரை திருமணம் பண்ணிக்க சொன்ன யாரை பண்ணிப்பீங்க" என்று கேட்டார். அதற்கு அவர் ரோஷினி ஃபுல்லா ஃபிரண்ட், ஆகையால் சுனிதா தான் சாய்ஸ் என்று சொன்னார். அதை கேட்டதும் தொகுப்பாளர் அப்போ சுனிதா தான சொல்லிறலாமா? என்று கேட்க ஆமாம் என்று கூறினார்.

Next Story