இவங்க இருந்தா நான் காட்ட மாட்டேன்... சன்னி லியோன் போடும் கண்டிஷன்... அப்போ தியேட்டருல தெரியுமே!

கவர்ச்சி நாயகியான சன்னி லியோன் தான் ஆடும் ஐட்டம் பாடலுக்கும் தற்போது சில நிபந்தனைகளை போட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது.

சன்னி லியோன்

சன்னி லியோன்

அடல்ட் படங்களின் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வந்தது. இந்தியில் துவங்கியவர் தற்போது ஏகப்பட்ட மொழிகளில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்து வருகிறார். 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் இவரை வைத்து வீரமாதேவி என்ற படத்தினை எடுத்து வருகிறார்கள்.

நாயகியாக ஒரு பக்கம் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அம்மணி கவர்ச்சி நடனம் ஆடுவதையும் விடுவதில்லையாம். தொடர்ச்சியாக டாப் நாயகர்களுடன் ஒரு பாடலுக்கு வரும் வாய்ப்புகளை ஓகே செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஒரு கண்டிஷனும் அம்மணி போடுகிறாராம்.

அதாவது அவர் நடனம் ஆடும் போது படப்பிடிப்பு தளத்தில் எந்த குழந்தைகளும் இருக்க கூடாதாம். அப்படி இருந்தால் உடனே அம்மணி படப்பிடிப்பினை கேன்சல் செய்து அவ்விடம் விட்டு உடனே செல்வதை தான் வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சன்னி லியோன்

சன்னி லியோன்

சன்னி லியோன் கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிஷா கவுர் வெபர், நோஹ் சிங் வெபர், அஷேர் சிங் வெபர் என மூன்று பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story